தமிழ்நாட்டின் பத்திரப்பதிவுக்கு புதிய வழிகாட்டி மதிப்பீடு சென்னை பெரு மாநகரத்திற்கு 20 சதவீதம், நகராட்சிகளுக்கு 5 சதவீதம் உயர்வு

தமிழ்நாட்டில் கட்டிடங்களுக்கு புதிய வழிகாட்டி மதிப்பீடு.. சென்னை பெரு மாநகரத்திற்கு 20 சதவீதம், நகராட்சிகளுக்கு 5 சதவீதம் உயர்வு


 புதிய கட்டிடங்களுக்கு மதிப்பீடு நிர்ணயம் செய்யும் வகையில் புதிய வழிகாடடி மதிப்பீடு வெளியிடப்பட்டதனால்.

தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்களிலா பத்திரப் பதிவின்போது கட்டிடங்கள், நிலங்களுக்கென தனித்தனியாக மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது 

புஞ்செய் மற்றும் நஞ்செய் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு ஏற்கனவே அரசு வெளியிட்டதன்படி தான் ஒவ்வொரு இடத்திற்கும் சந்தை விலைப்படி வழிகாட்டு மதிப்புள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தக் கட்டிடங்களின் மதிப்பு ரூபாய்.50 லட்சம் என இருந்தால், சார்பதிவாளர்கள் மூலம் மதிப்பு நிர்ணயம் செய்யப்படும்.

அதேநேரம் ரூபாய்.50 லட்சத்துக்கு மேல் இருந்தால் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள்மூலம் அந்த் கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். இப்போது கட்டிடங்களின் புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்துள்ளது பொதுப்பணித்துறை. அந்த அறிக்கையை பதிவுத்துறைக்கு அனுப்பியுள்ளது.

கட்டிடங்களில் சிறப்பு, சாதாரண, அடுக்கு மாடி, வணிகம், மருத்துவமனை பயன்பாடு என வகைப்படுத்தப்பட்டு, அந்த கட்டிடங்களுக்கு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கான்கிரீட்கூரை அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் தரை தளம் சதுர மீட்டருக்கு ரூபாய்.9,765, முதல் தளத்துக்கு சதுர மீட்டருக்கு ரூபாய்.9050, இரண்டாம் தளத்திற்கு சதுர மீட்டருக்கு ரூபாய்.9215, அதற்குமேல் ஒவ்வொரு தளத்துக்கும் சதுர மீட்டருக்கு ரூபாய்.139 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் டெரர்ஸ் வடிவமைப்பு பழங்காலத்து கட்டிடத்துக்கு தரைதளத்துக்கு சதுர மீட்டர் ரூபாய் .8,930, முதல் தளத்துக்கு ரூபாய்.8,730, 2 ம் தளத்திற்கு ரூபாய்.8,515, அதற்கு மேல் உள்ள தளங்களுக்கு சதுர மீட்டர் ரூபாய்.139 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சாதாரண ஓட்டு வீடு மற்றும் நாட்டு ஓட்டு வீடுகள் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கும், மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 32 கிலோ மீட்டருக்கு  உட்பட்ட பகுதியில் 20 சதவீதம், கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் மாநகராட்சிகளுக்கு 15 சதவீதமும், திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோயில், ஆவடி மாநகராட்சிகளுக்கு 10 சதவீதமும், அனைத்து நகராட்சிகளுக்கும் 5 சதவீதமும், கொடைக்கானல், ஏற்காடு, நீலகிரி மலைப்பகுதிகளில் 10 சதவீதமும் முன்பைவிட கூடுதலாக கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

புதிய மதிப்பீட்டு அறிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த மதிப்பு அதிகரிப்பால் முத்திரை தீர்வை கட்டணமும் உயர்ந்துள்ளது. இதன்படியே வீடு வாங்கும்போது முத்திரை தீர்வை வசூலிக்கப்படும். இந்த கட்டிட மதிப்பு அறிக்கையை அடிப்படையாக வைத்துதான் அரசு கட்டிடங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா