ஜேப்பியார் குழுமத்தால் ஆக்கிரமிப்பு செய்த ₹ 2010 கோடி மதிப்பிலான 91 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜேப்பியாருக்குச் சொந்தமான சத்யபாமா நிகர் நிலைப் பல்கலைக்கழகக் குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூபாய் 2010 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு.
ஜேப்பியாருக்கு இருந்த அரசியல் செல்வாக்கு காரணமாக ஆக்கிரமிக்கப்பட்ட ரூபாய் 2010 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவி ஏற்றதும், அரசு நிலங்கள் மற்றும் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பகுதியாக ஜேப்பியார் குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு கல்லூரி விஸ்தரிப்பு செய்த  ₹ 2010 கோடி மதிப்பிலான 91 ஏக்கர் அரசு   நீர்நிலைப் புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதிமுக நிறுவனர் மறைந்த எம்.ஜி.ஆர் தலைமையிலான அமைச்சரவையிலும் அவரது விசுவாசி என ஆனவர் மறைந்த ஜேப்பியார். இவர் சென்னைப் புறநகர்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்துள்ளார். பல கல்வி நிறுவங்களையும் நடத்தி வந்தார். இவரது நிறுவனம் மீது ஏராளமான புகார்கள் உள்ளது. ஜேப்பியாருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ - மாணவிகளிடம் நன்கொடை மற்றும் கட்டணங்கள் ரொக்கமாகவே அதாவது கணக்கில் காட்டாத கருப்பு பணமாகவே வசூல் செய்வதும், அவற்றை கணக்கில் காட்டாமல் இருப்பதும் பல கல்வி நிறுவனங்கள் போல இவரும் கல்வியை விற்பனை செய்து காசாக மாற்றியவர் ஆரம்ப காலத்தில் இவர் பரம ஏழை. அரசியல் ஊழல் பணத்தை கல்வியில் முதலீடு செய்யும் கயவர்களில் முதன்மையானவராக இருந்தார்


இதனால்,  2019 ஆம் ஆண்டு வருமான வரித்துறை ஜேப்பியாருக்கு சொந்தமான 32 இடங்களில்  சோதனைகள் நடத்தியதில், ரூபாய்.1200 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் காட்டப்படாத பல நூறு கோடிகள் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத ரூபாய்.350 கோடி மதிப்புள்ள சொத்துப் பத்திரங்கள், ரூபாய் .3 கோடி மதிப்புள்ள தங்க - வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அறிவித்தது.

இந்த நிலையில், ஜேப்பியார் குழுமம் சத்தியமா நிகர் நிலைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளில் உள்ள இடங்களையும் வளைத்துபோட்டுள்ளதாக வந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்திய தமிழ்நாடு அரசின் வருவாய் துறை ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலைக்கழகம் அமைந்துள்ள செம்மஞ்சேரி பகுதியில், 91 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமதித்துள்ளதைக் கண்டறிந்து மீட்டுள்ளது.

அந்தப் பகுதியில் நேற்று ஆய்வு செய்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் இதன் மதிப்பு ரூ.2010 கோடி என தெரிவித்து உள்ளார். ஒரு காலத்தில் எம் ஜி ஆர் மனைவி ஜானகியின் வலதுகரமாக இருந்து மறைந்த ஜேப்பியார் ஆக்கிரமிப்பு செய்த நிலம் அதே காலத்தில் ஜெயலலிதா ஆதரவாக இருந்த தற்போதைய அமைச்சர் இராமச்சந்திரன் மூலம் மீட்கப்பட்டது தான் புதிய தகவல் இதில் பொது நீதி ஒரு நிலுவையில் இருந்த பழைய கணக்கு பைசலானது வருவாய் துறை மூலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா