மத்திய பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீஸஸ் தேர்வு இறுதி முடிவு 2020 வெளியீடு

மத்திய பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீஸஸ் தேர்வு இறுதி முடிவு 2020 வெளியீடு


மத்திய அரசு தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்திய சிவில் சர்வீஸஸ் எழுத்து தேர்வு 2020, அடிப்படையில், நேர்காணல் தேர்வு 2021 ஆகஸ்ட் - செப்டம்பரில் நடைபெற்றது.   இதைத் தொடர்ந்து மெரிட் அடிப்படையில் ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி பணிகளுக்கு  பரிந்துரைக்கப்பட்ட  761 விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றை யுபிஎஸ்சி இணையளத்தில் http//www.upsc.gov.in காணலாம். முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் மதிப்பெண்களும் வெளியிடப்படும். 


சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகளை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும். 


https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/sep/doc202192431.pdf

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகள்; சிறப்பாகப் பணியாற்றிட வாழ்த்துகள்.

கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் அவர்கள் தேர்வுபெற்றதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

தேர்ச்சி பெறாதோர் துவளவேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள்.

வரும் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்குண்டான ஆதரவையும் உரிய பயிற்சியையும் நமது அரசு வழங்கும் என்ற உறுதியை இத்தருணத்தில் அளிக்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா