மத்தியப் பணியாளர் தேர்வாணையம் இந்திய பொருளாதார சேவை/இந்திய புள்ளியியல் சேவை எழுத்துத் தேர்வு 2021 முடிவுகள் வெளியீடு
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த ஜூலை மாதம் நடத்திய இந்திய பொருளாதார சேவை / இந்திய புள்ளியியல் சேவை எழுத்து தேர்வு முடிவுகள் அடிப்படையில் கீழ்கண்ட பதிவு எண்களை கொண்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த விண்ணப்பதாரர்களின் தேர்வு தற்காலிகமானது, மற்றும் எல்லா வகையிலும் தகுதியுடையவர்களாக காணப்படுகிறார்களா என்பதற்கு உட்பட்டது. இந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் சான்றுகளை நேர்காணல் தேர்வில் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த அறிவுத்தல்களை, நேர்காணலுக்கு வருவதற்கு முன்பு, யுபிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கவும்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை இந்த இணைப்பில் பார்க்கவும்.
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/sep/doc202191321.pdf
கருத்துகள்