முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காத்தப்ப பூலித்தேவருடன் கைகோர்த்த தன்னரசு நாட்டு கள்ளர்கள்.

காத்தப்ப பூலித்தேவருடன் கைகோர்த்த தன்னரசு நாட்டு கள்ளர்கள்.


பொது ஆண்டு 1757 பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிப் 

படை பூலித்தேவர் மற்றும் பாளையக்காரர்களின் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக ஆங்கில

கவர்னர் பிகாட் பிரபு திருச்சியிலிருந்து ஜான் கைலாடு என்பவனின் 

தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பினான் திருநெல்வேலி செல்வதற்காக மதுரையை நோக்கி வந்த படையை முன்னேறவிடாமல்  மேலூர்-நத்தம் கணவாய் பாதையை


தன்னரசு நாட்டுகள்ளர்கள் 

அடைத்து அப்படைகளை  தடுத்து நிறுத்தி மன்னர் பூலித்தேவரின் போராட்டத்திற்கு பலம் சேர்த்தனர். இன்று மாமன்னன் பூலித்தேவரின் ஜெயந்தி அவர் வரலாறு அறிவோம்:


பூழி நாடு பாண்டிய நாட்டில் அமைந்த உப அக நாடுகளில் ஒன்று. சங்ககாலம் தொட்டே மதுரை பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் நாடு 1378 ஆம் ஆண்டு சேர நாட்டிலிருந்த வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூலித்தேவர் என்ற தளபதிக்குத் பாண்டிய மன்னரால்  தர்மாசனமாக  வழங்கப்பட்டது. ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவராவார். துவக்க காலத்தில் தலைநகரம் ஆவுடையாபுரம். மதுரை நாயக்க மன்னர்கள் காலத்தில் (1529–64) பாண்டிய நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாடும் ஒன்றாகும்


அதன்  தலைநகரம் அப்போது பெயர் மாற்றமாகி நெற்கட்டாஞ்செவலானது.

மதுரை விஜயநகர நாயக்க மன்னர்களின் கடைசி அரசியான  இராணி மீனாட்சி தற்கொலை செய்த பிறகு நாயக்கர் கால வீழ்ச்சியில்  பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவராவார். பூலி நாட்டை ஆண்ட மன்னர்கள் அணைவரும்


பூலித்தேவனென்றே அழைக்கப்படும் நிலை. ஜமீன் பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேலிடத்திற்கோ, குடிவாரம் வழங்கிவிட்டு மேல்வாரம் தன்மையிலோ, வரி என்ற பெயரிலோ, ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம் நெற்கட்டுஞ்செவ்வல் என்றாகியது. 1750 ஆம் ஆண்டில் ஆங்கிலேய வைசிராய் இராபர்ட் கிளைவ் திருச்சிராப்பள்ளிக்கு வந்து ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி கொடியை ஏற்றி விட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண சந்திக்க வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தார்.



இதனால் வெகுண்ட பூலித்தேவர் திருச்சிராப்பள்ளிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவரே வெற்றியும் பெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.


1755 ஆம் ஆண்டு கர்னல் கீரோன் எனும் கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.

அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்ததையடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.


1756 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவைக் கொன்று ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டியதால் மனமுடைந்த பூலித்தேவர் போரை நிறுத்தித் திரும்பியதால் மாபஸ்கான் திருநெல்வேலியை கைப்பற்றி தன்வசப்படுத்தினான். 1765 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் பூலித்தேவரிடம் தோற்றார்.

1760 ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கிய போதும், 1766 ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766 ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்ற பனையூர் மருதநாயகம் என்ற கான்சாகிப் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல்  பத்தாண்டுகள் போரிட்ட பின்னர் தான் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார்.

நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் ஏற்க பூலித்தேவர் மறுத்துவிட்டார் தனது சுதேசி படை மூலமே பலம் கொண்டு போரிட்ட பபூலித்தேவரின் மறைவு பற்றி இரு கருத்துக்கள் நிலவ மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலில் உள்ள சங்கர நாராயணர் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் ஒரு  சித்தரின் பக்தராக  அவரிடம் விரும்பிய நிலையில்  கும்பினிப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும்,


அப்போது பெரிய புகை மண்டலமும் ஜோதியும்  ஏற்பட கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.                முனைவர் ந. இராசையா, வரலாற்றாய்வாளர்- தொகுத்த பூலித்தேவன் சிந்து- பல விபரங்கள் கூறும்.ஆங்கிலேய கிழக்கிந்தியர்களுக்குப் பயந்து அனைத்து குறுநில மன்னர்களும் வரி, கப்பம் செலுத்திக் கொண்டிருந்தனர். வரி, கப்பம் கொடுக்க மறுத்து முதல் சுதந்திர போராட்டத்தை நடத்தியவர்  மாமன்னர் பூலித்தேவர் ஆட்சி சிறப்பாக நிர்வாக திறமையுடன் ஆற்றியுள்ளார். பல்வேறு சமூக மக்களை ஒருங்கிணைத்து சமூக ஒற்றுமைக்கு வித்திட்டவர். ஒண்டிவீரன் பகடையையும், வென்னிக்காலடி என்ற ஆதிதிராவிட வகுப்பு தளபதியையும் தனக்கு வலமும், இடதுமும் வைத்தார்.


போர்க்களத்தில் வென்னிக்காலடி  மார்பில் ஈட்டி பாய்ந்தபோது அவரின் உயிர்காக்க மார்பில் சொருகிய வாளினை எடுத்து உடலில் இருந்து பெருகி வரும் ரத்தத்தினை நிறுத்தி உயிர்காத்தவர் பூலித்தேவர்                   அவரைக் கைதுசெய்து கொண்டு போகிறபோது தான் சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார் பூலித்தேவர். அவர் இறைவனைப்பாடிய பாடல்கூட இருக்கிறது. இதோ :

"பூங்கமலத்தயன் மால் அறியா உமைசங்கரனே

புகலக் கேண்மின்

தீங்குபுரி மூவாலிச வினையே – சிக்கி

உழறும் அடியேன் தன்னை

ஓங்கையில் சூழ் உலகமதில் உனை அன்றி

எனைக்காக்க ஒருவருண்டோ

ஈங்கெழுந் தருள்புரியும் இன்பவாருதியே

இறைவனே போற்றி போற்றி"


பிறகு என்ன ஆனார் எனத் தெரியவில்லை. அருட்பெருஞ்சோதி மறைந்ததைப்போல சங்கரன்கோவில் ஆலயத்திற்குள் போனவர் திரும்பவில்லை. நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் மர்மமான நிலை.மாமன்னர் பூலித்தேவருக்கு அரசுவிழா எடுக்க வேண்டும் என்று முதன்முதலில் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தவர் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர், தேசிய துணைத் தலைவர் டாக்டர் பி.வி.கதிரவன் மேலும் அவருக்கு நினைவை போற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டது மற்றும் விழா எடுத்தத நிகழ்வு புதிய பார்வை ஆசிரியர் காலம்சென்ற முனைவர் ம.நடராஜன்  தான் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 305 வது பிறந்த தினத்தில் நினைவைப் போற்றுவோம்        இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோமதி அம்பாள் ஆலயம். பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...