சென்னை பெண் காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்,மீது ஆள் கடத்தல் வழக்கு

சென்னை பெண் காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்,மீது ஆள் கடத்தல் வழக்கு 


ஆசிரியரை வேனில் கடத்தி, 4.50 லட்சம் ரூபாய் பறித்த சென்னை பெண் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்., உட்பட ஏழு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

துாத்துக்குடி மாவட்டம் ஏரல் குறிப்பான்குளத்தைச் சேர்ந்த சாலமன், (வயது 52); பள்ளி ஆசிரியர். 

2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்., 23  ஆம் தேதி இரவில் சோலைக்குடியிருப்பில் நடந்த திருமண வரவேற்பிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தவரை அங்கிருந்து வெளியே வரவழைத்து ஒரு கும்பல், கைகளைக் கட்டி வேனில் கடத்தியது.

சென்னையில், 'சில்வர் டச் பைனான்ஸ்' என்ற சினிமா பைனான்சியர் சிவகுமாரிடம், ஆசிரியர் சாலமனின் தம்பி சினிமா ஒளிப்பதிவாளரான தேவராஜ், 21 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதற்காக, சாலமனைக் கடத்தினர்.

மறுநாள் வேன், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தின் எதிரில் சென்று நின்றது.

தன்னை கடத்தியது பைனான்சியர் சிவகுமார், (வயது 45;) வளசரவாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் அமுதா, (வயது45); ., உதவி ஆய்வாளர் ரமேஷ்கண்ணன், (வயது 38), மற்றும் நான்கு காவலர்கள் என சாலமன் அறிந்து கொண்டார்.

அவரிடம் ரூபாய் மூன்று லட்சம், வேன் வாடகைக்கான செலவு ரூ 1.50 லட்சம் என 4.50 லட்சம் ரூபாய் கேட்டு துன்புறுத்தினர். 

சாலமன் மனைவி புஷ்பராணியின் சகோதரர் ஸ்டீபன், பணத்தை காவல்துறையினரிடம் கொடுத்து, சாலமனை மீட்டுச் சென்றார்.

இது குறித்து புஷ்பராணி, திருச்செந்துார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

மற்றும் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளருடன் , காவல்துறை இயக்குனருக்கும் புகார் அனுப்பினார். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திருச்செந்துார் நீதிமன்றத்தில் குற்ற விசாரணை முறைச் சட்டம் 156 / 3  ன்படி வழக்குத் தொடர்ந்தார். 

குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், இது குறித்து வழக்கு பதிவு செய்யுமாறு திருச்செந்துார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டதையடுத்து, காவல்துறை ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர்., ரமேஷ் கண்ணன், பைனான்சியர் சிவகுமார் உள்ளிட்ட ஏழு நபர்கள் மீது ஆள் கடத்தல், தாக்குதல், அவதுாறாகத் திட்டுதல் உள்ளிட்ட ஜாமினில் வெளிவர முடியாத 11 பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது தற்போது விசாரிக்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா