திருவையாறு - கண்டியூரில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

திருவையாறு - கண்டியூரில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்


தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு, கோவிட்-19: நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி, 75-ஆவது சுதந்திர ஆண்டு விழாக் கொண்டாட்டம், விழிப்புணர்வு வாகனத் துவக்க நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள கண்டியூரில் (24-09-2021) ல் நடைபெற்றது.


மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் – தஞ்சாவூர் இணைந்து நடத்திய இந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஜி. ஹரிஹரன், திருவையாறு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுலர் (சிடிபிஓ) திருமதி டி. அனுசுயா, கண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கே.ஜெயபாலன் விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசினர். 


நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் ஊட்டச்சத்து மூலம் தான் எந்தவிதமான நோய்களும் வராமல் பாதுகாக்க முடியும். இதை மனதில் வைத்து கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் என அனைவரும் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். அப்போது தான் கொரோனா போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய் வராமல் பாதுகாக்க முடியும் என வலியுறுத்தினர்.


இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் திரு. கே. ஆனந்த பிரபு தலைமை தாங்கிப் பேசினார். மக்கள் தொடர்பு கள விளம்பர உதவியாளர் திரு எஸ்.அருண் குமார் வரவேற்புரையாற்றினார்.  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் திரு. ஜி.ஆர். சற்குணநாதன் நன்றியுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து மற்றும் அதன் பயன்கள் குறித்த கண்காட்சியை பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். 

நிகழ்ச்சியில் “அனைவருக்கும் ஊட்டச்சத்து அவசியம்” என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்