நீட் தேர்வு அச்சம் காரணமாக மேலும் ஒரு மாணவர் தற்கொலை

மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தர்மபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் முருகேசன் ஆகிய மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயம் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்

இந்த தற்கொலையின் பரபரப்பு தமிழகத்தில் நீங்காத நிலையில்

இன்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது .தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 889 மாணவர்களும் நாடு முழுவதும் 16 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்திலிருந்து 47 ஆயிரத்து 144 மாணவர்கள், 71 ஆயிரத்து 745 மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து. தமிழகத்தில் 18 நகரங்களில் அமைந்த 224 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது 


தமிழில் எழுதுவதற்கு 12 ஆயிரத்து 999 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 11 ஆயிரத்து 236 பேர் அரசு பள்ளி மாணவர்களும் உள்ளனர்.நீட் தேர்வு அச்சம் காரணமாக மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்த

நிலையில்  தேர்வு நடக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள கூழையூரை சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் (வயது19) மேட்டூர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பை 2019 ஆம் ஆண்டு முடித்தவர் இரண்டு முறை நீட் தேர்வை எழுதி தேர்ச்சி ஆகாத நிலையில். மூன்றாவதாக இன்று நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு பயம் காரணமாக தனுஷ் தற்கொலை செய்து கொண்டதாகக் கருதப்படுகிறது. நீட் தேர்வுஅச்சம் காரணமாக மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு இரத்து குறித்து மாநில அரசு கொள்கை முடிவு அமல் படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி இராஜன் குழு பரிந்துரை செயல் வடிவம் பெற சட்ட நடவடிக்கை வேகம் பெறவேண்டும் என்பதே அணைத்து மக்களின் நோக்கமாகும். அது நீட் தேர்வு ரத்து செய்வது ஒன்றே இதுபோன்ற இடைநிலை மக்களின் பிள்ளைகளைப் பாதுகாக்க உதவும் என்பதை மாநிலத்தில் அரசும் நன்கு அறியும். திமுக இளைஞரணிச் செயலாளரும்,


சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், நீட் தந்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மேட்டூர் மாணவன் தனுஷின் வீட்டுக்குசென்று அவரின் உடலுக்கு மரியாதை செய்து பெற்றோருக்கு ஆறுதல் கூறினோம். இன்னோர் உயிர் போகாமல் பழ ஒன்றிணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய போராடுவோம் என்று கூறினார். அத்துடன் மாணவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை அளித்தார்வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வால் 14 மாணவர் உயிரிழந்த நிலையில் தற்போது தனுஷ் உயிரிழந்துள்ளார். ஆனாலும், ஒன்றிய அரசை நடத்துகிற-அதிமுக கூட்டணியான பாஜகவுக்கு நீட்டை ஒழிக்க மனமில்லை. அதை எதிர்த்து கேள்வி கேட்க துணிவற்ற அதிமுக& எதிர்க்கட்சிகள், திமுக அரசை குறைசொல்வது வெற்று அரசியல் மட்டுமே என காட்டமாக கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா