எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் இணை செயலாளராக உள்ள அல்கா நாங்கியா அரோராவுக்கு என்.எஸ்.ஐ.சி-யின் சிஎம்டி-யாக கூடுதல் பொறுப்பு

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் இணை செயலாளராக உள்ள அல்கா நாங்கியா அரோராவுக்கு என்.எஸ்.ஐ.சி-யின் சிஎம்டி-யாக கூடுதல் பொறுப்பு


சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) அமைச்சகத்தின் இணை செயலாளராக உள்ள திருமதி. அல்கா நாங்கியா அரோராவுக்கு செப்டம்பர் 14, 2021 முதல் தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (என்.எஸ்.ஐ.சி) -யின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக (சிஎம்டி)-யாக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1991 – ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு கணக்கு சேவை பணியை சேர்ந்த திருமதி. அல்கா அரோரா நாடு முழுவதும் பல்வேறு செயல்பாடுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். கூடுதல் ஆணையர் - கைவினைப்பொருட்கள், குடிசை வர்த்தக மையத்தின் நிர்வாக இயக்குனர், மேற்கு விமானப்படை மற்றும் இராணுவ மருத்துவமனையின் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர் என மத்திய அரசின் பல முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா