தோல் நிலைத்தன்மை பற்றிய சர்வதேச இணையகருத்தரங்கு

தோல் நிலைத்தன்மை பற்றிய சர்வதேச இணையகருத்தரங்கு


அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில்(சிஎஸ்ஐஆர்) - மத்திய தோல் ஆராய்ச்சி கழகத்தின் (சிஎல்ஆர்ஐ)  மூத்த விஞ்ஞானி டாக்டர் ஜே ராகவ ராவ் அவர்களின் ஓய்வை முன்னிட்டு ‘‘தோல் நிலைத்தன்மை குறித்த இணைய கருத்தரங்கை சிஎஸ்ஐஆர் - சிஎல்ஆர்ஐ  கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடத்தியது. இதில் சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ இயக்குனர் டாக்டர் கே.ஜே.ஸ்ரீராம் வரவேற்புரை நிகழ்த்தினார். தோல் துறையில் மிகவும் புகழ்பெற்ற இங்கிலாந்தின் நார்த்தம்டான் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர், டாக்டர் அந்தோணி டி கோவிங்டன், ‘‘நிலைத்தன்மை: தோல் அறிவியல் கண்ணோட்டம்’’  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

 தோல்பதப்படுத்துதலில் நிலைத்தன்மையின் ஆரம்பம், புதிய கருத்துக்கள் மற்றும் தோல் கல்வி குறித்து அவர் எடுத்துரைத்தார்.

அடுத்ததாக  சிஎஸ்ஐஆர் - சிஎல்ஆர்ஐ-யின் முன்னாள் மாணவரும், எத்தியோப்பியாவில் உள்ள யுனைடோ அமைப்பின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளருமான திரு அடோவுண்டுலெகேசி, ‘‘நிலைத்தன்மை மற்றும் தோல்பதப்படுத்துதலில் சுழற்சி பொருளாதாரம்: உதாரணம் எத்தியோப்பியா’’ என்ற தலைப்பில் பேசினார்.  எத்தியோப்பியாவில் தோல் தொழில் துறைக்கு நிலையான தீர்வுகளை ஏற்படுத்தியதில் தனியார், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்கை அவர் வலியுறுத்தினார். 

தோல் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும்  வேதியியலாளர்கள் அமைப்பின் சர்வதேச யூனியனின்(ஐயுஎல்டிசிஎஸ்) சுற்றுச்சூழல் ஆணைய  இயக்குனர் டாக்டர் வோல்ஃப்ரம் ஸகால்ஸ், ‘தோல் தொழில் துறையின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் முன்னேற்றங்கள்’’ குறித்து பேசினார். 

இறுதியாக   பிரேசில் ஜேபிஎஸ் நிறுவனத்தின் நிலைத்தன்மை மேலாளர் திரு கிம் சேனா, ‘‘தோல் உற்பத்திக்கு வாழ்க்கை சுழற்சி அணுகுமுறை’ என்ற தலைப்பில் பேசினார்.

இந்த இணையகருத்தரங்கில் பங்கேற்றவர்கள் பல கேள்விகளையும் எழுப்பினர். இந்த இணைய கருத்தரங்கில், உலகம் முழுவதும் இருந்து 125 பேர் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா