சிவகங்கை மாவடடம் காளையர்கோவில் ஆசிரியர் வீட்டில் கொள்ளை.
வசந்தம் நகரில் வசிக்கும் ஆசிரியரின் வீட்டை உடைத்து 150 சவரன் நகைகள், மற்றும் ரூபாய் 6 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்கள்
வேதமுத்து மகன் ஜேசுதாஸ் (44 ) இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் வேதமுத்து மகன் ஜேசுதாஸ் (வயது 44 ) இவரது மனைவியான ஆரோக்கிய ரோசி என்பவரும் அரசுப் பள்ளி ஆசிரியர். இருவரும் இன்று காலை பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பிய பொது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் வீட்டினுள் சென்று பார்த்த போது யாரோ மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 150 சவரன் நகைகள், மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது அவர்களுக்குத் தெரியவநத உடன் ஜேசுதாஸ் கொள்ளை சம்பவம் குறித்த புகாரை காளையார்கோவில் காவல் நிலையத்தில் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொள்ளைச் சம்பவம் குறித்து கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர் .
கருத்துகள்