சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடம் நிரப்பியதில் முறைகேடு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடம் நிரப்பியதில் முறைகேடு


மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புத் துறை இயக்குனர் தகவல் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர் பணியி டம் நிரப்பியதில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க ஊழல் தடுப்பு இயக்குனருக்கு

தேவகோட்டை அருகில் உடையனவயல் ராமநாதன் மனைவி சாந்தா மற்றும் சாத்தமங்கலம் வனிதா ஆகிய இருவரும் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்ததில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கடந்த 3 ஆண் டுகளுக்கு முன் தேவகோட்டை வட்டத்தில் 10 கிராம உதவியாளர் தலையாரி பணியிடம் நிரப்ப அறிவிப்பு செய்ய ப்பட்டதைத் தொடர்ந்து நாங்களும் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோம்.


ஆனால் அனைத்து தகுதிகளுமிருந்தும் எங்களை கிராம உதவி யாளராக நியமனம் செய்யவில்லை. அந்த நியமனத்தில் அரசாணை மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வில்லை. இனச்சுழற்சி முறை யாகப் பின்பற்றப்படவில்லை. எவ் வித அடிப்படை ஆவணங்களும் இல்லாமல் வேறு தாலுகாக்களில் உள்ளவர்களையும் சேர்த்து பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதென கூறியிருந்தனர்.


அந்தப் புகார் மனு மீது தேவகோட்டை கோட்டாட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட கோட்டாட்சியர் விசாரணை செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பிய நிலையில் சாந்தா, வனிதா ஆகியோர் ஊழல் தடுப்புத் துறை இயக்குனருக்கும் புகார் அனுப்பி இருந்தனர். அந்தப் புகார் மீது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கடிதம் வந்திருப்பதாகத் தகவல் இதில் விசாரணை நடத்தி ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா அல்லது இந்த ஊழலில் அவர்களை காப்பாற்ற உதவி செய்வார்களா என்பது இனிவரும் காலங்களில் தெரியும். தலையாரி நியமனம் தொடர்பான இதற்கு முன் பல குற்றச்சாட்டுக்கள் உண்டு .பணி நியமனம் செய்யப்பட்டவர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பத்தாம் வகுப்பு தவறிய நபரே தகுதியான நபர் ஆனால் இதில் பட்டதாரிகள் பணியில் நியமனம் செய்யப்பட்டதாக வந்த ஊழல் இலஞ்சம் இலாவண்யங்களால் மறைக்கப்பட்ட வரலாறு உண்டு. மேலும் படிக்காமல் போலி சான்றிதழ் பெற்ற நபர் நேர்முக தேர்வுக்கு பின்னர் தேர்வாக இருந்த நிலையில் தடுக்கப்பட்ட பின்னர் காவல்துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த வட்டாட்சியர் கடிதப் படி நடவடிக்கை எடுக்காமல் ஊழல் காரணமாக தப்பிக்க வைக்கப்பட்டது எல்லாம் பழைய வரலாறு ஆகிய நிலையில் தற்போது இந்த இரண்டு நபர்கள் பணி கிடைக்காத விரக்தி மற்றும் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் விதி மீறல்கள் மூலம் பயனடைந்த நிலையில் பாதிப்புகள் தற்போது புகாராக வருகிறது லோக் ஆயுக்தா விசாரணை செய்தால் உண்மை வரும். தற்போது நடக்கும் விசாரணையில் உண்மை வருமா என்பது சந்தேகம் தான்.கிராம உதவியாளர்கள் (தலையாரி) நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் 2014 லேயே கண்டனம் தெரிவித்த நிலையில் தேவகோட்டை தாலுகாவில் கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் போது, உரிய சட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. அரசாணைகளை மீறி கடந்த 2014-15 ஆண்டுகளில் 2.12.2014. 19-10-2015 தேதிகளில் தேவகோட்டை வட்டாட்சியரால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.               வயது,தகுதி, இடஒதுக்கீடு, கல்வி, விகிதாச்சாரம், முன்னுரிமை நியமனத்தில் பின்பற்ற வில்லை. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பலருக்கு பணிகிடைக்கும் தருணத்தில் தாசில்தார் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார்.நேர்காணல் நடத்தாமல் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்து முறைகேடாக பணி நியமனங்களை இரத்து செய்யவேண்டும். மாவட்ட, வட்ட சங்கங்களின் தீர்மானங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்ட காலத்தில் அப்போதய அரசு நடவடிக்கை எடுத்ததா என்பது எழு வினா ? அதுபோலவே இப்போது நடந்த ஊழல்களும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா