உள்ள பார்மரில் இந்திய விமானப்படைக்கான அவசரகால தரையிறங்கும் வசதி

பாதுகாப்பு அமைச்சகம் இந்திய விமானப்படைக்கான அவசரகால தரையிறங்கும் வசதியை ராஜஸ்தானில் உள்ள பார்மரில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி திறந்து வைத்தனர்இந்திய விமானப்படைக்கான அவசரகால தரையிறங்கும் வசதியை ராஜஸ்தானில் உள்ள பார்மருக்கு அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை 925ஏ-வின் சட்டா-காந்தவ் தடத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆகியோர் இணைந்து 2021 செப்டம்பர் 9 அன்று திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கிடையிலும் அவசரகால தரையிறங்கும் வசதிக்கான பணிகளை 19 மாதங்களில் நிறைவு செய்ததற்காக இந்திய விமானப்படை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தனியார் துறைக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த மூன்று கிலோமீட்டர் ஓடுதள வசதியில் இந்திய விமானப்படை விமானங்களை தரையிறக்குவது புதிய இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க புதிய வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என்றும், சுதந்திரத்தின் 75-வது வருடத்திலும், 1972 போரில் இந்தியா வெற்றி பெற்ற 50-வது ஆண்டிலும் இது நடைபெறுவது இன்னும் சிறப்பு சேர்க்கிறது என்றும் அவர் கூறினார்.

சர்வதேச எல்லைப்பகுதிக்கு அருகில் இந்த வசதி அமைந்துள்ளது நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் அரசுக்கு உள்ள உறுதியை வெளிப்படுத்துகிறது என்று கூறிய பாதுகாப்பு அமைச்சர், “இந்த நெடுஞ்சாலையும், தரையிறங்கு தளமும் மேற்கு பகுதியில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும்,” என்றார்.

எல்லையோர பகுதிகளின் வளர்ச்சி அரசின் முன்னணி முக்கியத்துவங்களில் ஒன்றாக இருப்பதாக கூறிய திரு ராஜ்நாத் சிங், எல்லைப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் எல்லையோர சாலைகள் நிறுவனத்தின் பங்களிப்பை பாராட்டினார். அடல் சுரங்கம், ரோஹ்தங் மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள உம்லிங்லா பாசில் 19,300 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான இடத்தில் வாகனத்தில் செல்லக்கூடிய சாலையை கட்டமைத்தது உள்ளிட்டவை சில உதாரணங்கள் என்று அவர் கூறினார்.

அவசரகால தரையிறங்கும் வசதியை தவிர, குந்தன்புரா, சிங்கானியா மற்றும் பகாசர் கிராமங்களில் மூன்று ஹெலிபேடுகளும் இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படைகளின் தேவைகளுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், பாதுகாப்பு படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், விமானப் படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதூரியா, பாதுகாப்பு துறை செயலாளர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி மற்றும் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட 19 இடங்களில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி: மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரிi

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 19 இடங்களில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை-925ஏ பகுதியில் அவசரகால தரையிறங்கும் வசதியை இன்று தொடங்கி வைத்துப் பேசிய அவர், முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளை பாதுகாப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுவடையும் என்று தெரிவித்தார்.

சென்னை, புதுச்சேரி சாலை மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் 19 இடங்களில் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று திரு கட்கரி கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையைக் கட்டமைக்கும் பணி அதிவிரைவாக மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இனி நமது தேசிய நெடுஞ்சாலைகளை ராணுவத்தினரும் பயன்படுத்துவார்கள் என்பதால் நம் நாடு மேலும் பாதுகாப்பாக இருப்பதுடன், அவசரகால நிலைகளுக்கு எப்போதும் தயாராகவே இருக்கும்.

மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், பாதுகாப்பு படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், விமானப்படை தலைவர் திரு ஆர் எஸ் பதௌரியா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா