ஒரே வாரத்தில் சிங்கம்புணரி பகுதியில் குடிபோதையால் நடந்துள்ள இரண்டாவது கொலைச் சம்பவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம் சதுர்வேதமங்கலம் சிவன் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது 46).ன் நண்பரான செல்வசேகரனுடன் சேர்த்து, அவரது உறவினரான லோகநாதனுக்குச் சொந்தமான இடத்தில் வேலி அடைக்கிறார்.

அந்த வேலை முடிந்த பின்னர் அவர்கள் மூவரும் அமர்ந்து மது குடித்து பின் போதையில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக மருது பாண்டியன் கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.


தகவலறிந்து வந்த சதுர்வேதமங்கலம் காவல்துறையினர், மருது பாண்டியனின் உடலைக் கைப்பற்றி சிங்கம்புணரி தாலுகா அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து லோகநாதன் மற்றும் செல்வசேகரன் இருவரிடையே தீவிர விசாரணை மேற்கொண்ட பின்பு அவர்கள் இருவரையும் சதுர்வேதமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.


ஒரே வாரத்தில் சிங்கம்புணரி பகுதியில் குடிபோதையால் நடந்துள்ள இரண்டாவது கொலைச் சம்பவம் இதுவாகும்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா