விவசாய குடும்பங்கள், நிலம் மற்றும் கால்நடைகள் குறித்த தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் ஆய்வறிக்கை

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

விவசாய குடும்பங்கள், நிலம் மற்றும் கால்நடைகள் குறித்த தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் ஆய்வறிக்கை2019 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பர் 31 வரை மேற்கொள்ளப்பட்ட தனது 77-வது சுற்று ஆய்வில், இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளில் இருக்கும் விவசாய குடும்பங்களின் வருவாய், நிலம் மற்றும் கால்நடைகள் குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் ஆய்வு செய்தது.
கிராமப்புற குடும்பங்களின் சொத்து மதிப்பு, அவர்களுக்கு சொந்தமான கால்நடைகள், வருவாய், கடன்கள், வேளாண் நடைமுறைகள், தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும்.இதன் படி, ஜூலை 2018 முதல் டிசம்பர் 2018 வரை 53.2 சதவீத விவசாய குடும்பங்கள் நெற்பயிர் உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளன. ஜூலை 2018  முதல் ஜூன் 2019 வரை வேளாண் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ 10,218 ஆக இருந்தது.


கடன் வாங்கியுள்ள விவசாய குடும்பங்களின் விகிதம் 50.2 சதவீதமாகவும், ஒரு விவசாய குடும்பத்தின் சராசரி கடன் தொகை ரூ 74,121 ஆகவும் இருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா