நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு

பிரதமர் அலுவலகம்  நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு


அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளின் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“காலப்போக்கில் நான் பெற்ற ஏராளமான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகள் ஏலத்தில் விடப்பட உள்ளன. நமது ஒலிம்பிக் போட்டியின் நாயகர்கள் வழங்கிய சிறப்பு நினைவுப் பரிசுகளும் இதில் அடங்கும். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலம் கிடைக்கும் தொகை நமாமி கங்கை முன்முயற்சிக்கு வழங்கப்படும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் அலுவலகம்

பிரபல இலக்கியவாதி திருமிகு மனோரமா மொகாபத்ராவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


பிரபல இலக்கியவாதி திருமிகு மனோரமா மொகாபத்ராவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“திருமிகு மனோரமா மொகாபத்ராவின் மறைவை அறிந்து மிகவும் துயரடைந்தேன். பலதரப்பு விஷயங்கள் குறித்த படைப்புகளுக்காக அவர் நினைவு கூரப்படுவார். ஊடகத் துறையிலும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி, அவர் பொது சேவையில் தீவிரமாக ஈடுபட்டார். அன்னாரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று கூறியுள்ளார்.பிரதமர் அலுவலகம்

ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் இரங்கல்


ஜார்கண்ட் மாநிலம், லதேகர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரையில் கூறியிருப்பதாவது;

‘‘ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி இளம் உயிர்கள் பலியானதை கேள்விபட்டு அதிர்ச்சியடைந்தேன்.  இந்த சோக தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்: பிரதமர்  நரேந்திரமோடி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா