மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலத்திற்குச் சொந்தமான ஐந்து இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் சிக்கிய, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரி, மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் பங்களா, அலுவலகம் உள்ளிட்ட, ஐந்து இடங்களில் இலஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியதில், ரூபாய் 13.50 லட்சம் ரொக்கம், 6.5 கிலோ தங்கம் மற்றும் சந்தன மரப் பொருட்களைக் கைப்பற்றினர்.ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி வெங்கடாசலம் 2019 ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறுப்பிலிருந்து வருகிற நிலையில் நேற்று மதியம் 12 மணி முதல் சென்னை கிண்டியிலுள்ள அவரது அலுவலகம் மற்றும் வேளச்சேரியிலுள்ள வீட்டில் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்..


தற்போதுள்ள பதவியில்  வெங்கடாசலம் விதிமுறை மீறி சொத்துக்கள் சேர்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அலுவலகத்தில் சோதனை நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.சென்னை கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் வேளச்சேரியிலேள்ள அவரது பங்களா; சேலம் மாவட்டம் ஆத்துார் வட்டம், அம்மம்பாளையத்திலுள்ள பூர்வீக வீடு உள்ளங் ஐந்து இடங்களில், நடந்த சோதனையில்  இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 6.5 கிலோ தங்கமும்; ரூபாய் 13.50 லட்சம்  ரொக்கமும் சிக்கியது. மேலும் வீட்டில், 10 கிலோ சந்தன மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தன மரத்துண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வரவே அவற்றையும் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இவர் வனத்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியதால், சட்ட விரோதமாக சந்தன மர கடத்தலில் ஈடுபட்டாரா; சந்தன மரப் பொருட்கள் விலை கொடுத்து வாங்கியதா  அல்லது பதவியை பயன்படுத்தித் திருடியதா மற்றும் சந்தன மரத்துண்டுகள் எப்படிக் கிடைத்தது என்பது குறித்தும், வனத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

சேலம் அம்மன்பாளையத்தில், வெங்கடாசலம், 40 ஏக்கர் நிலத்தை வாங்கிய விதம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளராக இருந்த பாண்டியன் வீட்டில் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகள்சோதனை நடத்தியதில், கட்டுக்கட்டாகப் பணமும், நகைகளும் சிக்கியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா