பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி நவ்ஜோத் சிங் சித்து இராஜினாமா
பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் அரசியல் போட்டி காரணமாக பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும், கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் சில ஆண்டுகளாகவே பிரச்னை இருந்தது.
பத்து நாட்களுக்கு முன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கேப்டன் அமரீந்தர் சிங். பின்னணியில் நவ்ஜோத் சிங் ஏற்படுத்திய அரசியல் அழுத்தம் காரணமாகக் கூறப்பட்டது., எம்.எல்.ஏக்களின் கூட்டத்த்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை, சரஞ்ஜித் சிங் சன்னியை முதல்வராகத் தேர்ந்தெடுத்தது.
முதல்வர் பதவியிலிருந்து விலகிய கேப்டன் அமரிந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து குறித்தும், காங்கிரஸ் தலைமை மீதுமான தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் காங்கிரஸ் கட்சியில் தான் அவமானத்தை சந்தித்து வந்ததாகவும் அவர் தெரிவித்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளது பரபரப்புக் கூடியுள்ளது. ஜூலை மாதம் 18 ஆம் தேதி தான் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக்கப்பட்ட நிலையில். பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், கேப்டன் அமரிந்தர் சிங்கை பதவியிலிருந்து நீங்கச் செய்வது மட்டுமே சித்துவின் நோக்கமாகும் நிலை இருந்தது
ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியிருக்கும் சித்து, காங்கிரஸில் தொடருவேன் என்று கூறியுள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் அகில இந்திய பஞ்சாயத்து நிலையில் உள்ளது.
கருத்துகள்