ரேசன் கார்டு சேவைகளை மேம்படுத்த, சிஎஸ்சி மின்னணு-நிர்வாக சேவைகள் இந்திய நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்


ரேசன் கார்டு சேவைகளை மேம்படுத்த, சிஎஸ்சி மின்னணு-நிர்வாக சேவைகள் இந்திய நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்


வர்த்தக வாய்ப்புகள், ரேசன் கடைகளின் வருமானம் ஆகியவற்றை அதிகரிக்க, மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, சிஎஸ்சி மின்னணு-நிர்வாக சேவைகள் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.   இந்த ஒப்பந்தத்தில் பொது விநியோக செயலாளர் திருமதி ஜோத்ஸனா குப்தா, சிஎஸ்சி துணைத்தலைவர் திரு சர்திக் சச்தேவா ஆகியோர் உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலாளர் திரு சுதன்சு பாண்டே, சிஎஸ்சி நிர்வாக இயக்குனர் திரு திணேஷ் குமார் தியாகி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.


சிஎஸ்சியின் சேவைகளை அனுமதிப்பதன் மூலம், ரேசன் கடைகளின வருமானம் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான சாத்தியங்களை ஆராயும் படி அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது, தற்போதுள்ள ரேசன் கார்டுகளில் புதிய தகவல்களை சேர்ப்பது, ஆதார் எண் சேர்ப்பது, ரேசன் பொருட்களின் இருப்பு நிலவரத்தை அறிவது, புகார்களை பதிவு செய்வது போன்ற சேவைகளை, சிஎஸ்சி மூலம் மேற்கொள்வது பற்றி மாநிலங்கள் ஆராயலாம். இது மாநில அரசுகளின் விருப்பத்தை பொருத்தது. தரவு பாதுகாப்பு மற்றும் இதர வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா