ஸ்வாமித்வா திட்டத்தின் தேசிய கூட்டத்தை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஸ்வாமித்வா திட்டத்தின் தேசிய கூட்டத்தை  தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்


ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஸ்வாமித்வா திட்டத்தின் தேசிய கூட்டத்தை, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங், தொடங்கி வைத்து உரையாற்றினார். 


இதில் பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு கபில் மொரேஸ்வர் பாட்டீல், மத்திய ஊரக வளர்ச்சி துறை இணையமைச்சர்கள் திரு ஃபகன் சிங் குலாஸ்தே மற்றும் சுஷ்ரி சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் பிரதிநிதிகள், இந்திய வங்கிகள் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்ட நிகழ்ச்சி.

ஸ்வாமித்வா திட்டத்தை, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான 2021 ஏப்ரல் 24ம் தேதி பிரதமர் தொடங்கிவைத்தார். அதன்பிறகு ஸ்வாமித்வா திட்டத்தின் தேசியளவிலான கூட்டம் முக்கியத்தும் பெறுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா