தேசிய பெண்கள் ஆணையம் தொடங்கிய பால் பண்ணை தொழிலில் பெண்களுக்கு நாடு தழுவிய பயிற்சி மறறும் திறன் மேம்பாட்டு பயிற்சி

பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் பால் பண்ணை தொழிலில் பெண்களுக்கு நாடு தழுவிய பயிற்சி மறறும் திறன் மேம்பாட்டு பயிற்சி: தேசிய பெண்கள் ஆணையம் தொடங்கியது


ஊரக பெண்களை மேம்படுத்தவும், அவர்களை தற்சார்புடையவர்களாக ஆக்கவும், பால் பண்ணை தொழிலில், பெண்களுக்கு நாடு தழுவிய பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியை தேசிய பெண்கள் ஆணையம் தொடங்கியுள்ளது.  தேசிய பெண்கள் ஆணையம், நாடுமுழுவதும் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, பால்பண்ணைத் தொழிலில் தொடர்புடைய பெண்களை அடையாளம் கண்டு பல நடவடிக்கைகளில் பயிற்சி அளிக்கிறது.  மதிப்பு மிக்க பால் தயாரிப்பு பொருட்கள், தரத்தை உயர்த்துவது, பால் பொருட்களை பேக்கிங் செய்து விற்பனை செய்வது போன்ற பல அம்சங்களில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக, ஹரியானா ஹிசாரில் உள்ள லாலா லஜ்பத் ராய் கால்நடை பல்கலைக்கழகத்தில், சுயஉதவிக் குழு பெண்களுக்கு மதிப்பு மிக்க பால் தயாரிப்பு பொருட்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.


இத்திட்டத்தை தொடங்கி வைத்த தேசிய பெண்கள் ஆணைய தலைவர் திருமதி ரேகா சர்மா, பெண்கள் மேம்பாட்டுக்கு, நிதி சுதந்திரம் முக்கியம் என்றார். இந்திய ஊரக பகுதியில் உள்ள பெண்கள், பால் பண்ணையின் அனைத்து தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். ஆனாலும், அவர்களால், நிதி சுதந்திரத்தை அடைய முடியவில்லை. தேசிய பெண்கள் ஆணையம், தனது திட்டங்கள் மூலம், பால் பொருட்களின் தரத்தை உயர்த்துவது, பேக்கிங் செய்வது, பால் பொருட்களின் இருப்பு காலத்தை அதிகரிப்பது, விற்பனை செய்வது ஆகியவற்றில் பெண்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை நிதி சுதந்திரம் உடையவர்களாக ஆக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்