சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் பார்சலில் இருந்த போதைப்பொருட்கள் பறிமுதல்

வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் பார்சலில் இருந்த போதைப்பொருட்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல்


சைக்கோட்ரோபிக் போதைப்பொருள் மற்றும் மூன்று கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய 4180 மாத்திரைகள் கொண்ட நான்கு தபால் பொட்டலங்கள் சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முதல் வழக்கில், தில்லியை சேர்ந்த ஒருவரால் இரண்டு பார்சல்கள் எத்திராஜ் சாலையிலிருந்து (சென்னை) இருந்து அமெரிக்காவிற்கு முன்பதிவு செய்யப்பட்டது. உள்ளே ஆவணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட பார்சல்களை சோதனை செய்து பார்த்தபோது 1980 டிராமாடோல் ஹைட்ரோகுளோரைட் மாத்திரைகள் (100 மிகி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


மற்றொரு வழக்கில், தில்லியைச் சேர்ந்த ஒருவரால் சேத்துப்பட்டில் (சென்னை) இருந்து அமெரிக்காவிற்கு இரண்டு பார்சல்கள் புக் செய்யப்பட்டன. பார்சலில் 1200 சோல்பிடெம் டார்ட்ரேட் மாத்திரைகள்

(ஐபி 10 எம்ஜி), மற்றும் 1000 டிரமாடோல் ஹைட்ரோகுளோரைட் மாத்திரைகள் (100 எம்ஜி) இருந்தன.

தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டம், 1985-ன் கீழ் சோல்பிடெம் டார்ட்ரேட் மாத்திரைகள் மற்றும் 1000 டிரமாடோல் ஹைட்ரோகுளோரைட் ஆகியவற்றை உரிய அனுமதியின்றி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது.

மூன்றாவது வழக்கில், அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து வந்த மூன்று பார்சல்களில் இருந்த 194 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.


மொத்தம் 4180 சைக்கோடிராபிக் மாத்திரைகள் மற்றும் 194 கிராம் கஞ்சா ஏழு பொட்டலங்களில் தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டம், 1985-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட தகவல்கள் சென்னை விமான நிலைய சுங்க ஆணையரகத்தின் முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்