நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் போட்டியின்றித் தேர்வு

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் போட்டியின்றித் தேர்வு..


அதிமுகவின், மாநிலங்களவை உறுப்பினர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர்    சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதனால், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில்  காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அறிவித்தது. காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதமும் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதமும் முடிவடையும்.

நிலையில், இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளர்களாக கனிமொழி சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் திமுக தலைவர் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

வேட்பாளர்களாக  கனிமொழி சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் இருவரும் செப்டம்பர் மாதம். 21 ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான கி.சீனிவாசனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், திமுகவுக்குப் போதிய பலம் இருப்பதால், இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இருவரும் போட்டியின்றி செப்டம்பர் மாதம். 27 ஆம் தேதி தேர்வானார்கள்.

தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு தமிழக சட்டப்பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்குத் தனித்தனியாகத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இத்தேர்தல்களின் காலியிடங்களின் எண்ணிக்கையும், சட்டப்படி செல்லத்தக்கதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கையும் சமமாக இருப்பதால், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பிரிவு 53 உட்பிரிவு 2-ன்படியும், 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்துவது குறித்த விதிகளில் விதி 11, துணை விதி 1-ன்படியும், கே.பி.முனுசாமியின் வெற்றிடத்துக்கு திமுகவின் கனிமொழி என்.வி.என்.சோமுவும், வைத்திலிங்கத்தின் வெற்றிடத்துக்கு கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரும் போட்டியின்றி அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்".

என  சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்