ஜவ்வாது மலையின் நடுகல்லும் ஒன்பது வயதுச் சிறுவன் நாட்டாண்மையும் பழங்குடியினர் வாழ்வியல்

ஜவ்வாது மலை  கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத்தொடர் ஆகும். இம்மலைத் தொடர்கள் வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 மீட்டர் ஆகும்.


இம்மலைத்தொடரில் உள்ள பீமன்மடவு அருவியும் காவலூர் வானியல் ஆய்வகமும் முதன்மை சுற்றுலாத் தலங்களாகும்.ஜவ்வாது மலை: புலியுடன் போரிடும் வீரன்.. 1000 ஆண்டுகள் கடந்த நடுகல்

ஊர் மக்கள் இதை 'மோர்புட்டான்' கல் என வழிபடுகின்றனர். நேர்த்திக்கடன் உள்ளவர்கள் சுடுமண் புரவிகள் (குதிரை உருவம்)களை வைத்தும்,  வைகாசி மாதம் பொங்கல் வைத்தும் வழிபடுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையிலுள்ள காப்புக்காட்டில் 1000 ஆண்டுகள் கடந்த வீரன்  நடுகல் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர். "ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள மேல்பட்டை கிராம இளைஞர்  தகவலைத் தொடர்ந்து அந்த நடுகல்லைத் தேடி செங்கத்திலிருந்து பரமனந்தல் வழியாகப் பயணித்தால் மேல்பட்டு கிராமம் தான் ஜவ்வாது மலையின் கடைசி கிராமம். பரமனந்தல் - மேல்பட்டு இடையே உள்ள தென்மலை காப்புக்காட்டுக்குள் செல்ல . பாதுகாக்கப்பட்ட. வனத்தின் நுழைவு வாயில்


இடப்புறத்தில் ஓர் ஒற்றையடிப்பாதை செல்கிறது. அதன் வழியே பயணித்தால் இரண்டு மலைகளை ஏறி இறங்கும் வரை பயணம் சாதாரணமாகத்தான் இருக்கும், மிகவும் கடினம் என்பது போல் கிடையாது. ஆனால் சுமார் 3 கி.மீ தூரம் தொடர்ந்து நடக்க  ஒரு மரத்தின் கீழ் நடுகல் ஒன்று இருப்பதைக் காணலாம். அந்த நடுகல்லை சுற்றி வரிசையாக சுடுமண்ணால் ஆன குதிரைகள் சுமார் 3 அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட ஒரு பலகைக் கல்லில் இடது கையில் வில்லையும், அம்பையும் ஏந்தி; வலது கையில் குறுவாளை உருவி உயர்த்தியவாறு வீரன் ஒருவன் நின்று சண்டையிடுவது போல் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது.


கழுத்தில் அணிகலனாக சவடி, இரு கைகளிலும் தோள் வளையும் அணிந்து காணப்படும் அந்த வீரன், இடது காலை முன்வைத்து போரிடச் செல்வதைப்போல  சிற்பத்தில் கட்டப்பட்டுள்ளது. அந்த வீரனுக்கு எதிர் திசையில் புலி ஒன்று ஆக்ரோஷமாக இருப்பதுபோல செதுக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் மீது அம்பு தைத்தது போல காட்டப்படவில்லை. எனவே, இப்புலியை எதிர்த்துப் போரிட்டபோது இந்த வீரன் மரணமடைந்து இருக்கக்கூடும் என கருதலாம். தான் வாழும் ஊரில் உள்ள ஆநிரைகளையோ (ஆடு, மாடு போன்றவை), மக்களையோ தாக்கும் புலியை எதிர்த்து சண்டையிட்டு உயிரை விடும் வீரரை நடுகல் எடுத்து வழிபடும் பழக்கம் பல்லவர் காலம் தொட்டே வழக்கிலுள்ளது.இவ்வகையான நடுகற்களை 'புலிகுத்திபட்டான்' கல் என்று அழைப்பார்கள்.இந்தப் பகுதியிலும் புலியிடமிருந்து ஊர் மக்களையும், ஆநிரைகளையும் காக்கும் பொருட்டு சண்டையிட்டு உயிர்நீத்த வீரனுக்கு அவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் நடுகல் எடுத்து வழிபாடு செய்ததை  அறியமுடிகிறது. இந்தச் சிற்பத்தில் உள்ள தோற்றம் மற்றும் சிற்பத்தின் தன்மையை வைத்து பார்க்கும்போது, இது கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடுகல் என அறியப்படுகிறது

ஊர் மக்கள் இந்நடுகல்லை 'மோர்புட்டான்' கல் என்ற பெயரில் வழிபடவே


மலையில் வாழும் மக்களில் 'மோர்பட்டான்' என்ற ஒரு தனி குலம் இருப்பதாகவும், அக்குலம், முற்காலத்தில் காவல் காக்கும் பொறுப்புகளில் ஈடுபட்டதாகவும், கூறும் நிலையில்

ஜவ்வாது மலைத் தொடரில் புலிகள் இருந்ததற்கான அடையாளமாக கோவிலூர் நடுகல்லைத் தாண்டி நமக்குக் கிடைத்துள்ள மேலும் ஒரு சான்று இந்த நடுகல். இந்த வரலாற்று நடுகல் முறையாக காக்கப்பட வேண்டியது அவசியம்.  இந்த மலை பல அதிசயங்களை உள்ளடக்கிய     ஜவ்வாது மலையில் நாட்டாண்மை ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் 427 கிராமங்களுக்குத்  தலைமை நாட்டாண்மையாக 9 வயதுச் சிறுவன் சக்திவேல் முடிசூட்டப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆம் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய ஜவ்வாது மலை. 427 கிராமங்களுடன் பசுமை எழிலுடன் பரந்து விரிந்து இரம்மியமாகக் காட்சியளிக்கிறது. இரண்டரை லட்சம் மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களது வழக்கப்படி, 36 கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்துக்கும் 'ஒரு நாட்டாமை, ஒரு ஊர் கவுண்டர், ஒரு மூப்பன்' இருக்கின்றனர்.

இவர்களை வழிநடத்தும் பொறுப்பு, தலைமை நாட்டாண்மைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அக்காலத்தில் மன்னருக்கு நிகரான அதிகாரம் கொண்ட பதவியாகும். தன்னாட்சி கள்ளர் நாடுகள் போன்ற தலைமை நாட்டாண்மையின் தீர்ப்பு அல்லது உத்தரவு மதித்து, மலைவாழ் மக்களின் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.

ஜவ்வாதுமலையின் தலைமை நாட்டாண்மையாக இருந்தவர், திருவண்ணாமலை மாவட்டம் மல்லிமடு கிராமத்தின் சின்னாண்டி. 80 ஆண்டுகளாகப் பதவி வகித்தவர், தனது 87 வது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார்.

அவரது மறைவுக்குப் பின்னர் ஓராண்டாக தலைமை நாட்டாண்மை பதவியில் யாரும் இல்லாமலிருந்தது. அதை நிரப்ப, 36 கிராம நாட்டாண்மைகள், ஊர் கவுண்டர்கள் மற்றும் மூப்பன்கள் முடிவு செய்ததையடுத்து, மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து, தங்களது தெய்வ நம்பிக்கையின் படி, காலமான சின்னாண்டிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டதும், தலைமை நாட்டாமையின் தேர்வுக்குத் தயாரானார்கள்.

அப்போது, சின்னாண்டியின் 2 வது மகன் முத்துசாமியின் 9 வயது மகன் சக்திவேலை, தலைமை நாட்டாமையாக நியமிக்க வேண்டும் என அங்கு சாமி அழைத்து பூசாரி அருள் வாக்கு கூறப்பட்டது. மறைந்த தலைமை நாட்டாமை சின்னாண்டியின் தெய்வ வாக்கை ஏற்றுக்கொள்வதாக நாட்டாமைகள், ஊர் கவுண்டர்கள், மூப்பன்கள் அறிவித்ததையடுத்து, 427 கிராமங்களுக்குத் தலைமை நாட்டாமையாக சக்திவேலுக்கு  இரண்டு மாதங்கள் முன்பு முடிசூட்டப்பட்டது. அவரது சொந்தக் கிராமமான மல்லிமடுவில், கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி நடைபெற்ற முடிசூட்டும் விழாவில் மலைவாழ் கிராம மக்கள் திரளாகப் பங்கேற்று, சக்திவேலை அரியணையில் ஏற்றி, செங்கோல் வழங்கிக் கொண்டாடினர்.

மலைவாழ் மக்கள் கூறும்போது, "தலைமை நாட்டாண்மையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வாழ்வோம். குலதெய்வ வழிபாடு, திருவிழா, சுப, துக்க நிகழ்ச்சிகளென, அனைத்தும் தலைமை நாட்டாண்மையின் முன்னிலையில் நடைபெறும். அவரது திருக்கரங்களால் தாலி எடுத்துக் கொடுத்த பிறகே திருமணமும் நடைபெறும்.

குடும்பம் மற்றும் சொத்துப் பிரச்சினைகள் என அனைத்தும் அவர் முன்பாகவே தீர்வு காணப்படும். எங்களது வாழ்வியல் முறையில் நாட்டாண்மை மற்றும் தலைமை நாட்டாண்மை என்பது ஒரு முக்கியப் பொறுப்பாகும். 9 வயதுச் சிறுவனாக இருந்தாலும், அவரது உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுவோம்" என்றனர்.

427 மலை கிராமங்களின் தலைமை நாட்டாண்மையாக முடிசூட்டப்பட்டுள்ள சக்திவேல், நாகலூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.

தலைமை நாட்டாண்மை பதவி குறித்து சக்திவேல் கூறும்போது, "தாத்தாவின் வழியில் பயணித்து, பெரியவர்களின் அறிவுரையை ஏற்றுச் சிறப்பாகச் செயல்படுவேன்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார். இதற்கிடையில், சிறுவன் சக்திவேலுக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை கிராமப் பெரியவர்கள் வழங்கி வர பழைமை மாறாது பழங்குடியினர் வாழ்வியல். நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா