சிவகங்கை அருகே குத்தகைக் கூலிக்கு ஆடு மேய்க்கும் வேளையில் ஈடுபடுத்தப்பட்ட இரு சிறுவர்கள் மீட்பு.

சிவகங்கை அருகே ரூ.10 ஆயிரம் கூலிக்கு ஒருவருடமாக ஆடு மேய்த்த இரு சிறுவர்கள் மீட்பு.


சிவகங்கை வட்டம் ஒக்கூர் அருகில் ரூபாய்.10 ஆயிரம் கூலிக்கு ஒரு வருடமாக ஆடுகளை மேய்த்த இரு சிறுவர்கள் தொழிலாளர் நலத்துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்

சிவகங்கை வட்டம் ஒக்கூர் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுவதாக சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிற்கு இரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தொழிலாளர் நல உதவி ஆணையாளர் ராஜ்குமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இராமச்சந்திரன், குழந்தைகள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு,  சமூக பணி உமா, வருவாய் ஆய்வாளர் கலாவதி, கிராம நிர்வாக அலுவலர் கௌரிசங்கர் மற்றும் மதகுபட்டி காவல்துறையினர் ஒக்கூர் கொழுக்கட்டைப்பட்டி சாலைப் பகுதியில்  புகாரில் தேடியதில்


அங்கு 14 வயதான இரண்டு சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்களை மீட்டு விசாரணை நடத்தியபோது  ஒரு சிறுவன் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் பெத்தநாச்சி வயல் கிராமத்தை சேர்ந்த பையனாவான். காளையார்கோவிலை அடுத்த பூதகுடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் அவனுடைய தந்தைக்கு ரூ.10,000 கொடுத்து சிறுவனை வேளைக்கு அழைத்து வந்ததும்,.     இன்னொரு சிறுவனும் அதே ஊரைச் சேர்ந்தவன் அவனுக்குத் தந்தை இல்லை, அவனை காளையார்கோவிலை அடுத்த பூதகுடி கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் ரூ,10,000 கொடுத்து கூட்டி வந்ததும் தெரிய வந்தது தெரிந்தது. அந்தச் சிறுவர்கள் கிருஷ்ணனுக்கும், தர்மலிங்கத்திற்கும் சொந்தமான செம்மறி ஆடுகளை கடந்த ஒரு வருடமாக ஊர் ஊராகச் சென்று வயல்களில் கிடை அமைத்தும் மேய்த்தும் அவர்கள் சொல்லும் படி வருவாய் ஈட்டுவதும் தெரிந்தது.

 மேலும் கடந்த ஒரு வருடமாக இவர்களுக்கு மூன்று வேளை உணவு மட்டும் வழங்கப்பட்டதாக கூறும் சிறுவர்கள். நிலை அறிந்து சிவகங்கை கோட்டாட்சியர் அந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டார். மேலும் அந்த இரண்டு சிறுவர்களையும் குழந்தைத் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர்கள் மற்றும் கிருஷ்ணன், தர்மலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க மதகுபட்டி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கௌரிசங்கர் புகார் செய்தார்.இந்த தொடர்பாக மதகுபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா