நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம்: விவசாயிகளுக்கு பல்வேறு எதிர்கட்சிகள், வங்கிகள் சம்மேளனம் ஆதரவுடன் நடைபெற்றது

நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம்: விவசாயிகளுக்கு  பல்வேறு எதிர்கட்சிகள், வங்கிகள் சம்மேளனம் ஆதரவுடன் நடைபெற்றது


மத்திய அரசு கொண்டுவந்த  மூன்று புதிய வேளாண்மை சீர்திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட  மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் கடந்த ஒன்பது மாதங்களைக் கடந்து நடைபெறுகிறது. இருந்தும் போராட்டத்தின் வீரியம் குறையவில்லை. என்ற போதிலும் அதேநேரத்தில் விவசாயிகளின் கோரிக்கையான மூன்று வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு உறுதியாகத் தெரிவித்துள்ள நிலையில்.விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மூன்று வேளாண்மை சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்தன் ஓராண்டு தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு பந்த் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந்த நிலையில்
இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ஆகியவை மூடுவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

 மருத்துவமனைகள்கள், மருந்துக் கடைகள், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் தனிப்பட்ட அவசரநிலைகளில் கலந்து கொள்ளும் நபர்கள் உள்ளிட்ட அனைத்து அவசரகால நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கு விலக்களிக்கப்பட்டும். தன்னார்வ முறை மற்றும் அமைதியான வழியில் பந்த் அமல்படுத்த விவசாயிகள் சங்கம் உறுதியளித்தது.


விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், ஆதரவிருந்தது குறிப்பாக, பஞ்சாப் மாநில முதல்வர் சரண்சிங் சன்னி, ஆதரவு  பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்  போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்த நிலையில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசுகளும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு  தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்