காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே அதனை நீக்க உத்தரவு

தமிழ் நாட்டில் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அனைத்து மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில் உள்ளதாவது: சில காவல் நிலையம் பெயர் பலகையில் தனியார் நிறுவனங்களின் பெயர்களும் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அது பொதுமக்களிடையே ஒரு தவறான புரிதலை உருவாக்கிக் காட்டும். எனவே தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே அதனை நீக்க வேண்டும்.

பெயர் பலகையில் காவல துறையின் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும். புதிதாக பெயர் பலகை வைக்க காவல் நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முன்பணத்தை செலவிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அவரது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா