கலாச்சாரம், பண்பாடு காக்க தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றப் பேரவையில் அறிவித்த பத்து முத்தான அறிவிப்புகள்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசிய போது வெளியிட்ட 10 முக்கியமான சிறந்த அறிவிப்புகள் வருமாறு,                   

 முதலாவதாக : நெல்லையில் 15 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது பொருநை (தாமிரபரணி) அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும். 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது பொருநை ஆற்றங்கரை நாகரீகம். ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளைக் கொண்டது பொருநை


இரண்டாவதாக: அகழாய்வுகளில் செய்யப்பட்ட கார்பன் டேட்டிங் சோதனை முடிவின் படி கொற்கை துறைமுகம் கிமு 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே செயல்பட்டதாகக்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக:. தமிழ்நாட்டின் பண்டைய முசிறி நகரம் இப்போது கேரளாவில் பட்டணம் என்ற பெயரில் அமைந்துள்ளது.   

நான்காவதாக:. தமிழ் வரலாற்று கொண்ட சேரநாட்டின் தொன்மை, பண்பாட்டினை அறிந்து கொள்ள கேரள தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுப்பணிகள் செய்யப்படும். 

ஐந்தாவதாக:. ஆதிச்சநல்லூர் சிவகளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நெல் மணிகள் அமெரிக்காவிற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது. கார்பன் டேட்டிங் சோதனையில் இந்த நெல்மணிகள் காலம் கிமு 1155 என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 ஆறாவதாக: ஆந்திர மாநிலத்தின் வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு ஒடிசா மாநிலத்தின் பாலூர் உள்ளிட்ட வரலாற்று இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
ஏழாவதாக:. கீழடி நாகரீகம் கிமு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கார்பன் டேட்டிங் சோதனை உறுதி செய்யபட்டுள்ளது.       

எட்டாவதாக . ரோம் பேரரசின் ஒரு பகுதியான எகிப்து மற்றும் ஓமன், மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, நாடுகளில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.       

ஒன்பதாவதாக:. கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகள, மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழசுரம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டு வருவதை அடிப்படையாக வைத்து கடலாடி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

   பத்தாவதாக:. மன்னர் ராஜேந்திர சோழன் தெற்காசிய நாடுகளில் மாபெரும் வணிகம் புரிந்த மன்னன். நம் வணிக பயணம் தெற்காசிய முழுக்க அப்போது கோலோச்சியது. மன்னர் ராஜேந்திர சோழன் வெற்றித்தடம்  பதித்த தெற்காசிய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். நாடுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் உரிய அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும்,


என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்தான பத்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அது வரவேற்பு பெறுகிறது காரணம் பல கடந்த பத்தாண்டுகளில் இறுதியில் நான்கு ஆண்டுகளில் ஆட்சி செய்தவர் முன்னால் முதல்வர் பழனிச்சாமி அவரது ஆட்சியில் நமது மக்கள் கண்டது

தமிழகத்தின் கலாச்சாரம் அழிவுக்கு சென்று நிலையில் வடநாட்டு கலாச்சாரம் உட்புகுந்ததும் உதாரணமாக நமது குல தெய்வமாக வழிபடும்

அய்யனார், கருப்பர்,காளி, உள்ளிட்ட தெய்வ வழிபாடு குறைந்து போய் மக்களை வடநாட்டு சாய் எனும் ஈர்ப்பை உருவாக்கப்பட்டதை யாரும் மறக்க வில்லை. மேலும் சாய வழிபாடு நமது கலாச்சாரத்தில் உள்ள வழிபாடு அல்லஅது நம் மீது 2000 ஆண்டு முடிவுக்கும் பின்னர் திணிக்கப்பட்டது. தமிழகத்தின் தன்மானம் கலாச்சாரம் பண்பாடு அதை மீட்க இந்த ஆய்வு வழி செய்ய உதவும்.  கீழடி அகழாய்வினை இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு முன்னெடுத்து. அதற்கு காரணம் அப்போது உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு 

அப் பிரிவினைச் சார்ந்த கி. அமர்நாத் ராமகிருஷ்ணா கண்காணிப்பு தொல்பொருளியலாளராகத் தலைமை தாங்குகினார். மேலும் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறையினர் இந்த ஆய்வில் பங்கெடுத்தார்கள். துணைப் பேராசிரியர் பி. வெங்டேசுவரன், கே. வடிவேல், கே. வசந்தகுமார். டி பாலாஜி, ஆர். மஞ்சுநாத், ஜி. கார்த்திக் ஆகியோரைக் கொண்ட வல்லுனர் குழுவிற்கு தலைமை தாங்கி நடந்தது.
கல்வெட்டியலாளர் வி. வேதாச்சலம் துறைசார் வல்லுனராகக் கடமையாற்றினார். இந்த நிலையில் ஒரு தொல்லியல் வட்டத்தில் ஒரு தொல்லியல் கண்காணிப்பாளரின் பணிக்காலம் அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் என்ற விதியை சுட்டிக்காட்டியது. கே. அமர்நாத் ராமகிருஷ்ணா கீழடி அகழ்வாய்வு தளத்தை உள்ளடக்கிய பெங்களூர் வட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்ததால் இட மாற்றம் செய்யப்பட்டதாக கூறியது.         இந்திய தொல்லியல் துறை ஜோத்பூர் வட்டத்தில் துணை தொல்லியல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த பி. எஸ். ஸ்ரீராமனை கீழடி அகழ்வாய்வு தளத்தின் தொல்லியல் கண்காணிப்பாளராக நியமித்தது. "கே. அமர்நாத் ராமகிருஷ்ணன் மட்டும் இடமாற்றம் செய்யாமல். நாடு முழுவதும் 26 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.    மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட தொல்லியல் கண்காணிப்பாளரான பி. எஸ். ஸ்ரீராமனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராவார்" என மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அப்போது கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா