நவீன இந்தியாவுக்கு ஏற்ற வகையில் தன்னை மறுசீரமைத்துக் கொள்ளுமாறு தேசிய கணக்கெடுப்பு மற்றும் வரைபட முகமையை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அதிக நன்மை மிகுந்த மற்றும் குறைந்த செலவிலான பலன்களை உருவாக்க ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு கணக்கெடுப்பு அதிகாரிகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்அதிக நன்மை மிகுந்த மற்றும் குறைந்த செலவிலான பலன்களை உருவாக்க ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு கணக்கெடுப்பு அதிகாரிகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.

நவீன இந்தியாவுக்கு ஏற்ற வகையில் தன்னை மறுசீரமைத்துக் கொள்ளுமாறு தேசிய கணக்கெடுப்பு மற்றும் வரைபட முகமையை (என் எம் ஏ) அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வானிலை துறை, கடல் தொழில் நுட்பம், புவி அறிவியல் உள்ளிட்ட தொடர்புடைய இதர துறைகளுடன் இணைந்து பணியாற்றுமாறு கணக்கெடுப்பு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப சிறப்பான பலன்களை அடைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு, தேசிய கணக்கெடுப்பு மற்றும் வரைபட முகமையின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா