மக்களுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

குடியரசுத் தலைவர் செயலகம்

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து


விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், “விநாயகர் சதுர்த்தி என்ற நன்னாளில் இந்தியாவில் வசிக்கும் சக குடி மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அறிவு, வளம், நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாக விளங்கும் பகவான் விநாயகரின் பிறந்தநாளைக் குறிக்கும் இந்தப் பண்டிகை மிகுந்த வேட்கை மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த வருடம், கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான நமது போராட்டங்கள் வெற்றி பெறவும் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படவும் பகவான் விநாயகரை பிரார்த்தனை செய்வோம்.

உற்சாகம் மற்றும் நல்லிணக்க சூழலியலில், கொவிட் சரியான நடத்தை விதிமுறையைப் பின்பற்றி இந்தப் பண்டிகையை நாம் கொண்டாடுவோம்”, என்று கூறியுள்ளார்.             மேலும்         குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு.  மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

“விநாயகர் சதுர்த்தி புனித நாளை முன்னிட்டு நமது நாட்டின் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அறிவு, வளம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக போற்றப்படும் பகவான் விநாயகர் பிறந்ததை விநாயக சதுர்த்தி குறிக்கிறது. ஒருவரது முயற்சிகளில் ஏற்படும் தடங்கல்களை போக்குவதற்கு விநாயகரின் திருநாமத்தை உச்சரிப்பது இந்தியாவின் வழக்கமாகும்.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் தங்கள் வீடுகளுக்கு வண்ணமயமான விநாயகர் சிலைகளை அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்து, கடவுளை பயபக்தியுடன் வணங்குவர். பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் இந்த விழாவின் போது பிரார்த்தனைகள், பெரிய கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவை நடைபெற்று, இறுதி நாளன்று சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதில் நிறைவடையும். பிறப்பு, வாழ்வு மற்றும் இறப்பு எனும் சுழற்சியையும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் பிரதிபலிக்கின்றன.

சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதென்பது பகவான் விநாயகர் கைலாசத்திற்கு திரும்புவதை குறிப்பதாக நம்பப்படுகிறது.

இந்த பண்டிகையானது நாடு முழுவதும் வழக்கமான பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வந்தாலும், பெருந்தொற்றின் காரணமாக நாம் இதை கட்டுப்பாடுகளோடும், எச்சரிக்கையோடும் முறையான கொவிட் நடத்தை விதிமுறைகளை பின்பற்றியும் இந்த வருடம் கொண்டாட வேண்டும். அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை நமது நாட்டில் இந்த பண்டிகை உண்டாக்கட்டும்,” என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ளார்.பிரதமர் அலுவலகம்

விநாயகர் சதுர்த்தி தினத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி தினத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் தகவல் தெரிவித்துள்ள பிரதமர் கூறியதாவது:

"உங்கள் அனைவருக்கும்  மகிழ்ச்சியான  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். இந்த புனிதமான  தருணம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கணபதி பாபா மோர்யா!" என்று கூறியுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா