"அமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த GSTகவுன்சில் நிலக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும்
இந்திய ஒன்றிய நிதியமைச்சர் மற்றும் கவுன்சிலுக்கு எனது நன்றிகள் எனவும் தமிழ் நாட்டின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்களையும் என்னையும் தமிழ்நாட்டில் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண பணியாற்ற சொல்லியிருந்தார்.
தற்போது இந்திய அளவிலான செயல்முறையை மேம்படுத்த நண்பர்கள் மற்றும் சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறேன்." என கருத்து தெரிவிக்கின்றார்.
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்..ஜி எஸ் டி குறித்து ஒருமித்த பார்வை இது: ஜி எஸ் டி திட்ட நடைமுறை அமலுக்கு வந்து நான்காண்டுகள் கழிந்தும் மத்திய அரசு ஜி எஸ் டி மன்றத்திற்குத் துணை தலைமை பதவிக்கு யாரையும் இது வரை தேர்ந்தெடுக்க முன் வராமல் இருக்கும் நிலை மாற்றம் கண்டது சிறப்பு.
அதுவும் அரசியல் சட்ட 101 வது திருத்தத்தின்படி , அரசியல் சாசனம் பிரிவு 279 A ன் படி ஜிஎஸ்டி மன்றத்தின் தலைவராக ஒன்றிய நிதி அமைச்சரும் , துணை தலைமைப் பொறுப்பிற்கு, உறுப்பினர்களாக உள்ள மாநில அமைச்சர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். என்ற நிலையில் இந்த சட்டவிதி இப்போது அமல்படுத்தப்பட்டது இது மட்டுமன்றி, ஜிஎஸ்டி மன்ற உயர் தீர்ப்பாயம் ( G S T Appellate Tribunal) அமைப்பதையும் மத்திய ஒன்றிய அரசு தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறதென்று உச்ச நீதி மன்றத் தலைமை நீதியரசர் என் வி. ரமணா தலைமையிலான அமர்வே கண்டனம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் நீண்ட கால தாமதம் கண்டித்த உச்ச நீதி மன்றம் கடந்த 6 ஆம் தேதி அரசு வழக்குரைஞர் துஷார் மேத்தாவை இனி பொறுக்க முடியாது, சாக்கு போக்குகளை கைவிட்டு தீர்ப்பாயத்தை உடனடியாக அமையுங்கள்” என உத்தரவிட்டுள்ளது. அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கிய வணிக வரி( Sales Tax- the right of levying and collecting taxes on the goods and commodities according to the preferences of the State) உரிமை ஒரு கூட்டாட்சி கோட்பாடு. அது பொது அதிகார உரிமையிலோ அல்லது ஒன்றிய அரசு அதிகார உரிமையிலோ இல்லை. அது மாநிலங்கள் உரிமையில் ( State List) உள்ளது. இந்த ‘மாநில உரிமை’ விஷயத்தில் நாடாளுமன்றம் எவ்வாறு தலையிட்டு சட்டமியற்றி மாற்ற முடியும். எனவே, இந்த 101 வது அரசியல் சட்ட திருத்தமே அரசியல் சாசனத்திற்கு முரணானது என்ற கருத்தும் நிலவுகிறது. மொத்த ஜிஎஸ்டி வரி வசூலில் ஒன்றிய அரசின் பங்கு 30 சதவீதம் அளவே.( மொத்த வரிகளில் ஒன்றிய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரி அளவு இன்றைய ஜிஎஸ்டி கலெக்ஷனில் 30 சதவிகிதம் மட்டுமே! ஏனைய 70 சதவீதத்தில் 50 விழுக்காடு மாநிலங்களின் கூடையிலிருந்து பெறப்படும் வருமானம், மீதி 20 விழுக்காடு ஒன்றிய அரசுக்கு மட்டும் போகும் செஸ் எனப்படும் தனிவரி வகையாகும்.
ஆனால் மொத்தமும் சென்றடைவது மத்தியில் அதனால் கணக்கு பெரிதாகத் தெரிகிறது.மாநிலங்கள் ஜிஎஸ்டி வருகைக்கு முன் வசூலித்த வரித்தொகையை கணக்கிட்டால் மாயம் விலகிவிடும்.
ஆனால் உண்மையில் வருமான இழப்பு மட்டுமின்றி, வரிவிதிக்கும் உரிமையும் இழந்த மாநிலங்கள் மாறியதற்கு ஜி எஸ் டி முறையே காரணம் என்பதை மறுக்கலாகாது.
சட்டீஸ்கர் மாநில நிதி அமைச்சர் டி. எஸ். சிங் தியோ தனிவரிகள் (செஸ்) விதிக்கும் உரிமையை மாநிலத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார் . அதுகுறித்து பல மாநில அமைச்சர்கள் கருத்து பறிமாறியுள்ள நிலையில் வரும் கூட்டத்திலும் இது வலுப் பெறலாம். தற்போதுள்ள மறு சீரமைப்பு குழுவில் நியமிக்கப்பட்ட தமிழகத்தின் தற்போது நிதியமைச்சர் உறுப்பினரான நிலையில் இதற்கு ஒரு தகுந்த தீர்வு காண முயல்வார் என்பது உறுதி.
கருத்துகள்