தேசிய நிதி அறிக்கை ஆணையம் (NFRA) தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது.

பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்  பங்குதாரர்களுடன் மேம்பட்ட ஈடுபாடு குறித்து பெறப்பட்ட கருத்துக்கள் படி முடிவெடுத்தது தேசிய நிதி அறிக்கை ஆணையம் (NFRA)


பங்குதாரர்களுடன் மேம்பட்ட ஈடுபாடு குறித்து பெறப்பட்ட கருத்துக்கள் படி, தேசிய நிதி அறிக்கை ஆணையம்  (NFRA) தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தேசிய நிதி அறிக்கை ஆணையத்தை, மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைத்தது.

பொது நல நிறுவனங்களுக்கு, இந்திய நிதி அறிக்கை முறையில் முறையான மாற்றத்தை செயல்படுத்தும் அடிப்படை நோக்கத்துடன்  இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.

தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்த என்எப்ஆர்ஏ, இது குறித்து பொதுமக்களின்  கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கேட்டிருந்தது.

இதன்படி முக்கிய தொழில் அமைப்புகள், மிகப் பெரிய கணக்கு நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து 17 கருத்துக்கள் பெறப்பட்டன.  . பங்குதாரர்களின் ஈடுபாட்டை  ஊக்குவிக்க, என்எப்ஆர்ஏ-வின்  திட்டங்களுக்கு,  பங்குதாரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொது மக்களின் கருத்துக்களை ஆராய்ந்த என்எப்ஆர்ஏ, தனது முடிவுகளை எடுத்துள்ளது. இந்த முடிவுகள் மற்றும் பெறப்பட்ட கருத்துக்கள் என்எப்ஆர்ஏ இணையதளத்தில்  https://nfra.gov.in/consultation_papers வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா