ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு '4 ஆண்டுகள் சிறை 20 ஆயிரம் அபராதம்ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு '4 ஆண்டுகள் சிறை 20 ஆயிரம் அபராதம்

ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு '4 ஆண்டுகள் சிறை 20 ஆயிரம் அபராதம்


சேலம் வருவாய் கோட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விதவைச் சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் வாங்கிய, அலுவலக உதவியாளருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

 சேலம் மாவட்டம், ஓமலுார் வட்டம் பண்ணப்பட்டியில் சுதா, வயது 29. இவரது கணவர் 2012 ஆம் ஆண்டில் விபத்தில் இறந்து விட்டார். 

அதனால் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற வேண்டி, சுதா மனு தாக்கல் செய்தார். 2014 ஆம் ஆண்டு மே மாதம் வருவாய் வட்டாட்சியர், மேட்டூர் வருவாய் கோட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுவை பரிந்துரை செய்து அனுப்பியுள்ளார். 


அங்கு அலுவலக உதவியாளராக இருந்த சீனிவாசன், வயது 33, சான்றிதழ் வழங்க, ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் கேட்டு, இறுதியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு இறங்கி வந்தார். லஞ்சம் கொடுத்து சான்றிதழ் வாங்க விரும்பாத சுதா சேலம் மாவட்டத்தில் உள்ள இலஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரை அனுகியதில்  அவர்கள் ஆலோசனைப்படி 2014 ஆம் ஆண்டு

செப்டம்பர் 14 ஆம் தேதியில் அலுவலகத்தில் கிளார்க் சீனிவாசனிடம், பினாப்தலின்  தடவிய 10 ஆயிரம் ரூபாயை சுதா வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறையினர் கைது செய்தனர். 

இந்த வழக்கு, சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் சீனிவாசனுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையுடன்,  20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ரெய்கானா பர்வீன் தீர்ப்பளித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா