கடத்தி வரப்பட்ட ரூ.1.40 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணுச் சாதனங்கள் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல், இருவர் கைது

விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.1.40 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணுச் சாதனங்கள் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல், இருவர் கைது


விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து எஃப் இசட்-447 மற்றும் ஜி9-471 விமானங்களில் 2021 அக்டோபர் 18 அன்று காலை நான்கு மணி மற்றும் நான்கு முப்பது மணிக்கு சென்னை வந்திறங்கிய ஆறு ஆண் பயணிகள் வெளியே செல்லும் வாயிலில் சுங்க அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர்.

அவர்களது உடல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.67 கிலோ தங்கம் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கச் சட்டம் 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ.1.40 கோடி ஆகும்.

இருவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மைச் சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா