முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

1780 ஆம் ஆண்டு வீரமங்கை இராணி வேலுநாச்சியாரால் சிவகங்கை சுதேசி சமஸ்தானத்தின் மீட்பு நாள் இன்று

ஆற்காட்டு நாவாப் மற்றும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிடியிலிருந்து சிவகங்கை சுதேசி சமஸ்தானத்தின் மீட்பு  நாளாகும் அதன் வரலாற்றுப் பார்வை: 1780 ஆம் ஆண்டு முதல் 1789 ஆம் ஆண்டு வரை சிவகங்கை சுதேசி சமஸ்தானத்தின் இராணியார் ஆட்சி புரிந்தார் வீரமங்கை வேலு நாச்சியார்.


இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று இரகுநாதசேதுபதி என்ற கிழவன் சேதுபதி (1674-1710) சோழபுரத்துக்கு அருகிலுள்ள நாலுகோட்டை மருமகன் சசிவர்ன உடையனத்தேவருக்கு தன் மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியார் திருமண  சீதனமாக சிவகங்கை சீமை 2000 சதுர மைல்களைக் கொண்டதை வழங்கிய நிலையில் அவரது ஆட்சியில் 

முத்து வடுக நாதர் மகனாய்ப் பிறந்தார்.. இவர் 1742 ஆம் ஆண்டில் சிவகங்கையின் மன்னராக்கப்பட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் இராமநாதபுரம் சேதுபதியான  செல்லமுத்து தேவருக்கும், சக்கந்தி முத்தாத்தாள் நாச்சியருக்கும் 1730 ஆம் ஆண்டு பிறந்து வளரும் மகளுக்கு குதிரை ஏற்றம், வாள் வீச்சு, சிலம்பம், வளரி என்ற ஆயுதத்தை கையாளல் போன்ற போர்க் கலைப் பயிற்சிகளைக் கவனத்துடன் கற்றுத் தேர்ந்தார்.தாய்மொழி தமிழுடன்  கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலமென ஆறு மொழிகளையும் பன்மொழிப் புலமையும், திறமையும் பெற்றார். மகளின் திருமணம் அக்காலத்தில்  12, 13 வயதிலேயே திருமணம் செய்து விடுவது வழக்கம்.சிவகங்கைச் சீமையை ஆளும் முத்துவடுக நாதருக்கு தன் மகளை 1746 ஆம் ஆண்டில் திருமணம் முடித்தார்.16 வயதில் பின்னர் கௌரி நாச்சியாரை 2 வதாக மணந்தார் முத்து வடுக நாதர்.

மன்னர் முத்துவடுக நாதர் சிவகங்கை சமஸ்தானத்தின் ஆட்சியில் விவசாயம், நிர்வாகம் சிறப்பாக நடந்தது. அவர் நேரடியாக தனது எல்லைக் குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று பணிகளைக் கவனிப்பார். அவருக்கு உதவியாக முல்லையூர் என்ற அரளிக்கோட்டையைச் சார்ந்த மந்திரி தளவாய் தாண்டவராய பிள்ளை, மற்றும் தளபதி மருது சகோதரர்களும், வேலு நாச்சியாருமிருந்தனர்.

சிவகங்கைப் பகுதி செழிப்புடன் இருப்பதை அறிந்த ஆற்காட்டு நவாப் முகம்மது அலி சிறு படையை சிவகங்கைக்கு அனுப்பி வைத்தான். வந்த அந்தப் வந்தேறி


படைத்தலைவன்  மன்னர் முத்துவடுக நாதரைச் சந்தித்து, நவாப், கப்பம் கட்டும் தொகை கேட்டதாகச் சொல்லவே

“கப்பமா? யார் யாருக்கு கட்ட வேண்டும்?” என்று கேட்டார் அரசர்.

”நவாப்பின் அடிமைகள் நீங்கள். ஆம். பாளையங்களை ஆளும் பாளையக்காரர்கள் அனைவரும், அவருக்குக் கப்பம் கட்ட வேண்டும்.’

“நவாப்புக்கு கப்பம் கட்ட வேண்டும் என்பது எந்த சட்டத்திலும் சொல்லவில்லையே தளபதி?”


“நீங்க நவாப்பை இழிவு படுத்துகிறீர்கள்?”

“முதலில் அவர் யார்? எங்கள் தேசத்துக்கு மன்னரா? சல்லிகாசு கூட கப்பம் என்ற பெயரில் கொடுக்க மாட்டேன் போய் விடுங்கள்” என்றார் மன்னர் முத்து வடுக நாதர்.

படைத்தளபதி வந்த பத்தாவது நாளில் முகம்மது அலியிடமிருந்து கடிதம் வந்தது.

‘பாளையக்காரர்களில் சிவகங்கையில் நீங்களும் இன்னும் சில பாளையக்காரர்களும்  கப்பம் கட்ட மறுக்கிறீர்கள். உடனே கப்பம் கட்டுங்கள். இல்லையெனில் சிவகங்கையில் நீங்கள் ஆட்சியிலிருக்க முடியாது.

கடிதத்தை படித்ததும் கோபம் கொண்ட மன்னர் முத்து வடுக நாதருக்கு

‘கப்பம், இதைக் கேட்கும் உரிமை நவாப்புக்கு யார் கொடுத்தது? குமுறிய அவர் தைரிய மிருந்தால் நேருக்கு நேர் மோதட்டும்.

தளவாய் தாண்டவராய் பிள்ளை, பிரதானி மருது சகோதரர்களை அழைத்த மன்னர் முத்து வடுக நாதர், படைகளைத் தயாராக வைத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

அப்போது மன்னருக்கும் வேலுநாச்சியாருக்கு பிறந்த மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் கொல்லங்குடியில் தங்கியிருந்தார்.


1772 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆற்காடு நவாப் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பேனிப் படையோடு சிவகங்கை மீது போர் தொடுத்தான். மன்னர் முத்துவடுக நாதர் தம் படையினரோடு நவாப் படையை எதிர்த்தார். தீரர்கள் மருது சகோதரர்கள் ஒரு பக்கம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பேனிப் படையைத் தாக்கிய கடும் போர் நிகழ்ந்தது.

இந்த யுத்தம் முன்பாக நவாப் படையினரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. பெருத்த இழப்புகளோடு பின் வாங்கி ஓடினர். நவாப் மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பேனிப் படையினர்.

சிவகங்கையில் மக்கள் வெற்றி விழாக் கொண்டாடினர். தோல்வியடைந்த அடிபட்ட ஆற்காட்டு நவாப் மறுபடியும் தன்னைச் சீண்டாமல் இருக்க மாட்டான் என்பதை உணர்ந்த மன்னர் முத்து வடுக நாதர் படையை பெருக்கவும், கடுமையான பயிற்சியை வழங்கவும்  தனது பிரதானி மருது சகோதர்களுக்கு உத்தர விட்டார்.


வீர மருது சகோதரர்கள் இருவருமே நேர்மை, உண்மையைக் கடைப்பிடிப்பவர்கள்,  தங்கள் தாய்நாடான சிவகங்கை மீது உயிரையே வைத்திருப்பவர்கள். பெரிய மருது போர்ப் பயிற்சியில் மிகச் சிறந்தவர். சின்னமருது வளரி வீச்சு வல்லவர். இவர்கள் இருவரையும் நாட்டை நேசித்ததை போல மக்களும் இவர்களை நேரித்தனர்.

ஆற்காடு நவாப், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பேனி தளபதி வெள்ளையன் பான்சோரை தனது மாளிகைக்கு வரவழைத்துப் பேசினார்.

“மிஸ்டர் பான்ஸோர், சிவகங்கை சீமையைக் கைப்பற்ற வேண்டும். மன்னர் முத்து வடுக நாதரைக் கைது செய்ய வேண்டும். அவரை நேரடியாக தாக்கினால் வெற்றி பெற முடியாது.

நமது ஒற்றர்களை, அவரின் செயல் பாடுகளைக் கண்காணிக்கச் செய்து தக்க சமயத்தில் தாக்கி சிவகங்கைச் சீமையை நாம் கைப்பற்ற வேண்டும் என்று ஆத்திரமாய்க் கொதித்தான் ஆற்காட்டு நவாப் முகம்மது அலி.

“சிவகங்கை சீமையை கூடிய விரைவில் கைப் பற்றுவோம். அதற்கான வேலை நடந்துக் கொண்டிருக்கிறது என்றான் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி வெள்ளையன் பான்ஸோர்.

1772 ஆம் ஆண்டு, ஜுன் மாதம் 21 ஆம் தேதி முகம்மது அலி மகன் உம்தத்-உல்-உம்ரா, தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையில் சிவகங்கையை நோக்கி படையுடன் வந்தான்.

இன்னொரு பிரிவினர்–ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் தளபதி பான்ஸோர் தனது படையுடன் சிவகங்கையை நோக்கி வந்தான்.

ஆனால் உம்தத்-உல்-உம்ரா, சிவகங்கையை விட்டு சோழபுரத்தை கைப்பற்றச் சென்றான். பான்ஸோர் சிவகங்கை சென்றான்.

25.06.1772 அன்று நள்ளிரவு   திருக்கானாப்பேர் என்ற காளையார் கோவில் ஸ்ரீ காளீஸ்வரர் பூஜையில் கலந்து தரிசிக்க தனது இளைய மனைவி கௌரி நாச்சியாருடன் முத்துவடுக நாதர் கோவிலில் தங்கியிருந்தார்.

கோவிலுக்கு வெளியே சிறு படை இருந்தது. திடிரென்று கோவிலைச் சுற்றி தளபதி பான்ஸோர் பெரும்படை முற்றுகையிட்டு நின்றது.

‘பகலில்  மோதத் தைரியமில்லாமல் நடு இரவில் இறைவனுக்கு பூஜை செய்யும் அர்த்தசாமத்திலா யுத்த தர்மம் மீறி, வந்து தாக்குவது பேடிகளே’ என்று குமுறிய மன்னர் முத்து வடுக நாதர் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் படையோடு மோதினார். பான்ஸோர் பீரங்கியோடு வந்திருந்தான். அதன் மூன் வாள்வீச்சு எடுபடவில்லை.

கடும்போரில் பல வெள்ளையத் தலைகளை பறித்த மன்னர் முத்து வடுக நாதர், அப்போரில் குன்று வீச்சில் மனைவியுடன் வீரமரணம் அடைந்தார்.

பகலில் படை நடத்தி போர் நடத்தாமல், இரவில் ஆந்தைகள் போல் வந்து போர் நடத்தி தன் வீரக் கணவரின் உயிரை பறித்து விட்டார்களே என்று பொங்கி எழுந்த வீரமங்கை வேலு நாச்சியார்  படையெடுக்கச் சொன்னபோது உடனிருந்த  தளவாய் தாண்டவராய பிள்ளை,

”அரசியாரே, இப்போது மோதுவது சரியான தருணமல்ல. உங்களைக் கொல்ல பெரும் படையோடு வந்து கொண்டிருக்கிறான். அவனோடு போரிட்டால் மரணம் நிச்சயம்.

“பிள்ளை, என் உயிர் கணவரின் உயிரை பறித்த பான்ஸோரை கொல்லாமல் விடமாட்டேன். வரட்டும் அவனை ஒரு கைப்பார்க்கிறேன்’ என பொங்கினார் வேலுநாச்சியார்.

”அரசியாரே, நமது அரசர் வீரமரணம் அடைந்தது பெரும் வேதனைக்குரியது தான். பான்ஸோரிடம் பீரங்கிப் படை வருகிறது. அதன்முன் வாள் வீச்சு பயன் தராது. நாம் இப்போது தப்பிப்போம்.

பின் ஓரிடத்தில் தங்கி பெரும் படையைத் திரட்டி ஆற்காட்டு நவாப்பையும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனியாரையும் நமது மண்ணிலிருந்து துரத்துவோம்” என்றார் பெரிய மருது.

“ஆம்! அரசியாரே நாம் தப்பிப்பது கம்பினிப் படைக்குப் பயந்தல்ல. பதுங்கித் தாக்கவே” என்றார் பிள்ளை.

வேலுநாச்சியார், தன் மகள் வெள்ளச்சி நாச்சியாரோடும், தளவாய் தாண்டவராய பிள்ளை, தீரர் மருது சகோதரர்களோடும் சிறு படையோடு திண்டுக்கல்லுக்கு அருகே உள்ள விருப்பாட்சி என்ற பாளையத்திற்கு  அதன் பாளையக்காரர் கோபால நாயக்கர் உதவி கேட்டுச் சென்றனர். விருப்பாட்சி பாளையத்தை கோபால நாயக்கர் என்பவர் ஆண்டார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி மீது கோபத்திலிருந்தார், வேலுநாச்சியாரை அன்புடன் வரவேற்றவர், வந்தவர்கள் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.  திண்டுக்கல் மைசூர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

பான்ஸோர் காளையார் கோவிலை சூறையாடினான். அன்றைய மதிப்பு 50,000 ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றான்.இதன் பிந்தைய மதிப்பு அதிகம்.

ஆற்காட்டு நவாப் சிவகங்கைச் சீமைக்கு, ‘உசைன்பூர்’ என்று பெயரிட்டனர்.

மக்களின் மேல் வரி போட்டு அவர்களை சித்திரவதை செய்தான். கப்பம் கட்டாத நிலங்களைப் பறிமுதல் செய்து, அதன் மூலம் கொள்ளையடித்தான்.

வேலுநாச்சியாரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து விட்டு தீரர்கள் மருதுசகோதரர்கள் சிவகங்கை சென்று மக்களை. நவாப்பிற்கு எதிராக பலம் கொண்ட மட்டும் தூண்டி விட்டனர்.

வேலுநாச்சியார், தனது மூத்த மந்திரி தளவாய் தாண்டவராய பிள்ளையை அழைத்தார்.

“அரசி!” சொல்லுங்கள்.

“மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு கடிதம் எழுதுங்கள். அவருக்கு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிகளைக் கண்டால் பிடிக்காது.

ஆங்கிலேயரை நாட்டை விட்டு துரத்த கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். அவரிடம் சிவகங்கைச் சீமையை மீட்க 5000 போர் வீரர்களையும், நம்மோடு அனுப்பி வைக்கும்படி கேட்போம்’ என்றார் அரசி வேலுநாச்சியார்.

“நல்ல யோசனை ” என்ற பிள்ளை 8.12.1772-ல்  மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு கடிதம் எழுதினார்.

மைசூர் மன்னர் ஹைதர் அலியும் படைகளை அனுப்புவதாக கூறினார். ஆனால் படை நடத்திச் செல்ல இது ஏதுவான நாளில்லை. சில மாதங்கள் போகட்டும் என்றார் அலி.  வேலுநாச்சியார் அதை ஏற்றார்.

1773 ஆம் ஆண்டு முதுமையின் காரணமாக தளவாய் தாண்டவராய பிள்ளை மரணமடைய அரசி வேலுநாச்சியாரும் வீரத் தளபதிகள் மருது சகோதரர்களும் மிகவும் வேதனையடைந்தனர்.

உத்வேகத்தை அதிகரித்து மருது சகோதரர்கள் புதிய படைகளைத் திரட்டினர். அரசி வேலுநாச்சியாரும் படைவீரர்களுக்கு தகுந்த பயிற்சியளித்தார். தொடர்ந்து எட்டாண்டுகள் ஓடின. இனியும் சிவகங்கையை விட்டு வைத்தால் ஆற்காட்டு நவாப்பும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனியும் நாட்டை தரை மட்டமாக்கி விடுவார்கள் என்பதை உணர்ந்தார் அரசி வேலுநாச்சியார். மேலும் வாழும் மக்களும் தங்கள் நாட்டு அரசியை எதிர்ப்பார்த்துக் கொண்டும். அவ்வப்போது ஆற்காட்டு நவாப்புக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட படி போராடிக் கொண்டிருந்தனர்.

தளபதிகள் மருது சகோதரர்களை அழைத்து, "இனியும் தாமதிப்பதில் பயனில்லை. நாம் சிவகங்கையை கைப்பற்றியே ஆக வேண்டும். மன்னர் ஹைதர் அலி நம்மை அவரின் உடன் பிறந்த சகோதரியைப் போல சிறந்த முறையில் அன்பு செலுத்தி பாதுகாத்தார்.

அவரிடம் படைகளைத் திரட்டிக் கொண்டு செல்வோம். மன்னரிடம் அனுமதி கேட்டு வாருங்கள்” என்றார் அரசி.

தீரர்கள் மருது சகோதரர்கள் மைசூர் ஹைதர் அலியின் படைத்தளபதிகளிடம் தங்களின் எண்ணங்களைக் கூறினார்கள்.

அவர்களின் எண்ணங்கள் ஹைதர் அலிக்குத் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் வத்தலக் குண்டு பகுதியில் வேங்கைப் புலி ஒன்று பயிர்களை நாசப்படுத்துவதோடு மட்டுமின்றி, மக்கள் பலரை கொன்று வந்ததை அழிக்க பலர் முயன்றும் இயலாத நிலை. சுல்தான் மருது சகோதரர்களை அழைத்தார். வத்தலக் குண்டு வேங்கை புலியை கொல்லும்படி கேட்டுக் கொண்டார். மருது சகோதரர்கள் சென்றனர். காட்டில் இரண்டு நாட்கள் அங்குமிங்கும் அலைய விட்ட புலியை மூன்றாம் நாள் கொன்றனர்.

அவர்களின் வீரத்தை மெச்சிய ஹைதர் அலி, சிவகங்கை மீது படையெடுக்க அவர்களுக்கு ஆயிரம் படைவீரர்களையும், ஆயிரம் குதிரைப் படைகளும், 12 பீரங்கிகளையும் கொடுத்தார். மேலும் படைகளின் செலவுக்கு ஒரு லட்சம் பொன்னும் கொடுத்தனுப்பினார். இராணியை பல்லக்கில் ஏற்றி விட்டு மருது சகோதரர்கள் ஆளுக்கொரு குதிரையில் ஏறினார்கள்.

திண்டுக்கல்லிருந்து இராணி வேலுநாச்சியாரின் பெரும் படை வருவதை அறிந்த ஆற்காட்டு நவாப்பும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையும் இன்று உள்ள சத்துரு சம்கார கோட்டை பகுதியில் நடுவழியிலேலே தடுக்க முடிவு செய்தனர். மருது சகோதரர்கள் தங்கள் படையை நான்காக பிரித்தனர்.

“திருப்புவனத்தில் நவாப்பின் அடியாளாக செயல்பட்ட மல்லாரி ராவ் பீரங்கியோடு மருதுசகோதரர்களை எதிர்த்த போது மல்லாரிராவ், வளரி மூலம் கொல்லப்பட அவனின் படைகள் பின் வாங்கி ஓடினர். அதுவே முதல் வெற்றி. திருப்புவனத்தின் எல்லை வரை மல்லாரி ராவின் படையைத் துரத்தி விட்டு, தனது ஆட்களை அங்கு சிறு படையோடு விட்டு விட்டு, அவ்வூரைக் கடந்தனர். மருதுசகோதரர்களும், இராணி வேலுநாச்சியாரும் சோழவந்தானை அடைந்தனர். அங்கு ஓரிரு நாட்கள் தங்கினர். வண்டியூர் வழியே சிலைமான் வந்த போது மல்லாரிராவின் சகோதரன் ரெங்காராவ், இராணியை எதிர்த்தான்.

அண்ணன் மரணத்தால் அவன் கோபத்தில் இருந்தான். சின்னமருது, “சண்டை வேண்டாம், வழியை விடு “என்று ரங்கராவை கேட்டான். “என் அண்ணனை கொன்ற உங்களை சும்மா விடமாட்டேன்” என்று ரங்கராவ் ஆத்திரத்துடன், அவர் மீது பாய சின்னமருது கைவளரியால், அவனைக் கொன்றார்

மதுரையில் கர்னல் மார்ட்டிசின் படையோடு இருப்பதை ஒற்றர் மூலம் அறிந்த இராணி  வேலு நாச்சியார் மருது சகோதரர்களின் தலைமையிலான படையை அனுப்பி வைத்தார். இருபடைகளும் கடுமையாய் மோதின. கர்னல் தடுமாறினார். சமாளிக்க முடியாமல் மானாமதுரையில் படைகள் மருது சகோதரர்களின் தாக்குதலில் வெள்ளையர் தலைகள் உருண்டன.

என்றாலும் இரண்டாம் நாள் சண்டையில் மருதுவின் படைவீரர்கள் பலர் இறந்தனர். இந்த நிலையில் திரட்டி வைத்த படையுடன்  மற்றும், பறம்புமலை பகுதியிலிருந்து இராணுவப் படையும் உதவிக்கு வர, கர்னல் அடி தாங்காமல் மானாமதுரையை விட்டே ஓடினார் .அதுவே வேலுநாச்சியாருக்கு பெரும் வெற்றி. அடுத்து சிவகங்கையை கைப்பற்றப் பெரும் தாக்குதலை நடத்த முடிவு செய்தார்.  காளையார் கோவிலை மீட்கும் படைக்கு மருது சகோதரர்களை நியமித்தார். திருப்புத்தூர் படைப்பிரிவிற்கு நல்லியம்பலம் என்பவரை தலைமை ஏற்கச் செய்தார்.

ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிப் படைக்கு எதிராக முன்முனைத் தாக்குதலை நடத்தினார். வேலுநாச்சியாரின் கடும் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் கம்பெனி மற்றும் நவாப் படைகள் தடுமாறிய நிலையில் இராணியின் கணவரைக் கொன்ற பான்ஸோரை போரின் போது அடிபணிந்தான், அவனை கொல்லாமல்  மன்னித்தார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் வேலுநாச்சியார் பீரங்கிப் படையோடு வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆகவே வரலாறு இன்னும் பேசுகிறது.

தளபதிகள் மருது சகோதரர்கள் காளையார் கோவிலில் முகாமிட்டிருந்த ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிப் படைகளை அங்கிருந்து துாத்தியடித்தனர்.

மும்முனையில் கடும் தாக்குலைச் சமாளிக்க முடியாமல் ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி படைகள் சிவகங்கை சீமையை விட்டு ஓடினர் வேலுநாச்சியார் வரலாறு படைத்தார். .

சிவகங்கை மீட்ட 1780 ஆம் ஆண்டு பொது மக்களின் வெற்றி முழக்கத்தோடும் பெரும் வரவேற்போடும் எட்டு ஆண்டுகள் கழித்து, தமது மண்ணில் காலடி பதித்தார் வீரப் பேரரசியாக வேலுநாச்சியார் அரசியானார். மருது சகோதரர்கள் பிரதான மந்திரியாயினார். மக்கள்  மகிழ்வுடன் கொண்டாடினர்.

இராணி வேலு நாச்சியார் தனக்கு ஐம்பது வயதானதால் தனது மகளை சிவகங்கை சீமையின் அரசியாக்க முனைந்தார். மருது சகோதரர்கள் அதற்கு ஆதரவு கொடுத்தனர். தன் மகளை அரசியாக்கி மருது சகோதரர்களில் பெரிய மருதுவை படைத்தலைவராகவும், சின்ன மருதுவை தலைமை முதலமைச்சராகவும் நியமித்து, இராணி வேலுநாச்சியார்  முன் மொழிந்தார்

மருது சகோதரர்களின் துணைக் கொண்டு, தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊருணிகள், குளங்களை வெட்ட ஏற்பாடு செய்தார். ஆலய புனர்நிர்மானம் செய்தார்  விவசாயம் பெருகியது. தனது ஆட்சிக்குட்பட்ட பல ஊர்களுக்கு சாலைகளை அமைத்தார். அழகன்குளம், குடியூர், திருப்பத்தூர், குன்றக்குடி, மானாமதுரை போன்ற ஊர்களின் சாலைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை மேம்படுத்த, வணிகம் வளர்ந்தது. காளையார் கோயில் கோபுரம் பாழடைந்து கிடப்பதைக் கண்ட மருதுசகோதரர்கள் கோவில் கோபுரத்தை அழகாக உயர்த்தி கட்டினார். இன்றும் கோவில் கோபுரம் கம்பீரமாக நிற்கிறது. தங்கள் தங்கள் வழிபாட்டுக்கு சர்ச்சும், மசூதியும் கட்ட உத்தரவு தர வேண்டும் என்றனர். உடனே சருகணியில் அரசுக்கு உரிய இடங்களில் இரு மத கோவில்களைக் கட்ட கட்டளை இட்டார். பிற மதத்தை மதிக்கும் உயர்ந்த குணத்தை கண்டு அவரை அவர்கள் பாராட்டினர். தன்னை எட்டாண்டுகள் காப்பாற்றிய ஹைதர் அலி என்பவரை அவரால் மறக்க முடியுமா என்ன?இராமேஸ்வரம் கோயிலுக்கு ஏராளமாய் அள்ளிக் கொடுத்தார். ஏழ்மை இல்லாத நாடாக தன் சீமையை மாற்றி அமைக்க வேண்டும் என்று உறுதியுடன் செயல் பட்டார். மன்னர் முத்து வடுக நாதர் போரில் வீரமரணம் அடைந்த பின்னர் ஒருசமயம் மருதுசகோதரர்கள்,  தளவாய் பிள்ளை ஆகியோருடன் வேலுநாச்சியார் குதிரையில் தப்பிச் சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் தப்பிச் செல்வதை அறிந்த கம்பெனியார், அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர். கொல்லங்குடி அருகில் அரியாகுறிச்சி அய்யனார் கோவில் அருகே வந்தவர்கள்,  கோவில் முன் ‘உடையாள்’ என்ற பெண் அமர்ந்து இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருந்தது இராணி தப்பிக்க உதவிய அதுவே  இன்று சக்தி வாய்ந்த ஆலயம்.

இந்திய சுதந்திர போராட்ட களத்தில் ஆங்கிலேயர்க்கு எதிராக முதல் முதலாக போர் தொடுத்து வெற்றிப் பெற்ற முதல் பெண்மணி வீரர். அக்காலத்திலேயே – சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே பல மொழிகளை கற்று தேர்ந்தெடுப்பது மாபெரும் சாதனையே! இந்திய பெண்களின் வழிகாட்டியாய் திகழும் இராணி வேலுநாச்சியாரை என்றென்றும் வணங்குவோம். நாட்டுப் பற்றுள்ளவராய் மாற இன்று சிவகங்கை மீட்கப்பட்டு மீண்டு வந்த நாளாகும் இதுதான் நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த