அக்டோபர் 2-ஐ தூய்மை இந்தியா தினமாக குடிநீர் மற்றும் சுகாதார துறை கொண்டாடியது.

ஜல்சக்தி அமைச்சகம் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா இயக்கம் கிராமப்புறம் பகுதி 2-ன் கீழ் 2021 அக்டோபர் 2 அன்று தூய்மை இந்தியா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஊக்கமளிக்கும் தலைமையின் கீழ் நாட்டின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் (அகம்) எனும் சமூக பங்களிப்பு முன்முயற்சியின் மூலம் இந்திய அரசு கொண்டாடி வருகிறது.

அகம் பிராச்சாரத்தின் ஒரு பகுதியாக, திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லாத கிராமங்களின் சாதனையை கொண்டாடும் வகையிலும், இதை ஊக்குவிக்கும் வகையிலும், தூய்மை இந்தியா இயக்கம் கிராமப்புறம் பகுதி 2-ன் கீழ் முக்கிய செயல்பாடுகளை ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது.


கடந்த வருடங்களைப் போலவே, விரிவான தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தூய்மைக்கு ஊக்கமாக திகழும் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான 2021 அக்டோபர் 2-ஐ தூய்மை இந்தியா தினமாக குடிநீர் மற்றும் சுகாதார துறை கொண்டாடியது.


அகம் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தூய்மை ரதங்களின் பயணத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடங்கின. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வட்டங்களுக்கு சென்ற இந்த ரதங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களில் தங்கள் பயணத்தை நிறைவு செய்தன.

முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளால் 800-க்கும் மேற்பட்ட தூய்மை ரதங்களின் பயணங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. தூய்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதிலும் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை குறித்த நடைமுறை மாற்றங்களை கொண்டு வருவதிலும் இந்த ரதங்கள் முக்கிய பங்காற்றின. தூய்மை இந்தியா தினமான 2021 அக்டோபர் 2 அன்று சுமார் முப்பத்தி நான்கு ரதங்கள் நாடு முழுவதும் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டன.


மகாத்மா காந்தியின் கனவான தூய்மையான சமுதாயத்தை அடையவும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்களை உருவாக்கவும் தூய்மை இந்தியா தினத்தன்று மக்கள் மீண்டுமொரு முறை உறுதி ஏற்றுக் கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா