பாஸ்பேட் & பொட்டாஷ் உரங்களுக்கு 2021-22 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
பாஸ்பேட் & பொட்டாஷ் உரங்களுக்கு 2021-22 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் (1 அக்டோபர் 2021 முதல் 31 மார்ச் 2022 வரை) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு 2021-22 ஆம் ஆண்டில் (1 அக்டோபர் 2021 முதல் 31 மார்ச் 2022 வரை) வழங்குவது என்ற மத்திய ரசாயன துறையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்கள் கீழ் வருமாறு:-
1 கிலோ பாஸ்பேட் உரத்திற்கு ரூ.45.323, பொட்டாஷ் உரத்திற்கு ரூ.10.116 என்ற அளவில் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.28,602 கோடி ஒதுக்கப்படும்.
சிறப்பு ஒருமுறை தொகுப்பாக டிஏபி உரத்திற்கு ரூ.576 கோடி கூடுதல் மானியம் வழங்கப்படும்.
கருத்துகள்