புதிய பாம்பன் பாலத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

புதிய பாம்பன் பாலத்தின்  நீளம் 2078 மீட்டர். செப்டம்பர் மாதம், 2021 ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இராமேசுவரம்- தனுஷ்கோடி புதியபாதை தூரம் 18.7 கி.மீ., இதன் திட்டமதிப்பு ரூபாய். 208.3 கோடி.பாம்பன் கடலில் இரட்டை வழி ரயில் பாதை அமைக்கும் கட்டுமானப் பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளா் பி.கே. மிஸ்ரா  ஆய்வு செய்த நிலையில்


இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்- ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாலம் அமைக்க ரயில்வேத்துறை திட்டமிட்டதையடுத்து ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்க பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய


நிலையில், பாம்பன் வரவதி கடல் பகுதியில் தற்போதுள்ள ரயில் பாலம் அருகே புதிய பாலத்துக்கான தூண்கள் அமைக்க ஆய்வுப் பணிக்கான பூமி பூஜை 2020 ஆம் ஆண்டு நவம்பர். 8 ஆம் தேதி நடைபெற்ற சூழலில். புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாலம் இரு வழித்தடத்தில் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது கடலுக்குள் 99 தூண்களும், ஒவ்வொரு தூண்களுக்கும் இடையே 30 மீட்டா் முதல் 50 மீட்டா் வரை இடைவெளி விடப்படும். மேலும் தற்போது உள்ள பாலம் கடல் பகுதியில் இருந்து 3 மீட்டா் உயரத்துடன் உள்ளது. புதிய பாலம் 6 மீட்டா் வரை உயரமாக அமைக்கப்படும். இதனால் சிறிய ரக படகுகள் எப்போது வேண்டுமானாலும் சென்று வர முடியும். தற்போதுள்ள தூக்கு பாலம் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலம் 22 மீட்டா் வரை அதிநவீன தொழில் நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இந்த கட்டுமானப் பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில்


 புதிய பாலம் கட்டுமானப் பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளா் பி.கே.மிஸ்ரா  ஆய்வு செய்த பின்னா் பழைய ரயில் பாலத்தின் உறுதித் தன்மை மற்றும் தூக்கு பாலத்தின் உறுதி மற்றும் செயல்பாடுகள் குறித்து அவா் ஆய்வு
மேற்கொண்தனையடுத்து, அவா் ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்து பயணிகளுக்கு தேவையாக அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டாா்.மேலும் தனுஷ்கோடியிலுள்ள பழைய ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்ததுடன் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்க சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பது குறித்தும் செய்த இந்த ஆய்வின் போது ரயில்வே பொறியாளா்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.இப்புதிய பாலத்தின் திட்ட மதிப்பீடு ரூ. 250 கோடிகள். இப்போதுள்ள பாலப் பகுதியில் 53 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசினாலே, ரயில் மேற்கொண்டு செல்ல சிக்னல் கிடைக்காத நிலையில்  அடிக்கடி ரயில் போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டது. ஆனால் புதிய பாலத்தில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட உள்ளதால், எந்தளவுக்கு மழை, காற்று என இயற்கை அச்சுறுத்தலும் பாதிக்காத வகையில் அமைக்கப்படுமென ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.146 எஃகு காரிடர்கள் மூலம் 2,058 மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள இப்பாலம் ஏற்கெனவே 104 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் உள்ளது. இது அப்பாலத்தின்
வரையறுக்கப்பட்ட பயன்பாட்டுக் காலத்தை விட மிகவும் அதிகமாகும். மேலும், இந்தப் பாலத்தின் உயரம், கடல் நீர் மட்டத்திலிருந்து 1.5 மீட்டர் உயரமே உள்ளதால், பாலத்தின் காரிடர்களின் அடிப்பாகம் கடல் நீரில் நனைந்து துருப்பிடிக்கும் நிலையில் உள்ளது. இதனால், இப்பாலத்துக்கு இணையாக, இரட்டை ரயில் பாதைக்கு ஏற்றவாறு, புதிய பாலம் அமைக்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டு தற்போது பணிகள் விரைவு  காண்கிறது இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையத்தை, இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் பாலம் 1914, பிப்ரவரி 24-ஆம் தேதி மீட்டர் கேஜ் பாதையாக கட்டப்பட்டது. 1988 ஆம் ஆண்டு சாலைப் பாலம் அமைக்கப்படும் வரை, பாம்பன் ரயில் பாலம் மட்டுமே, ராமேஸ்வரம் தீவுக்கும், பிரதான நிலப்பரப்புக்கும் உள்ள ஒரே இணைப்பாக இருந்தது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினசரி ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல இந்தப் பாலம் பயன்பட்ட நிலையில்.புதிய பாம்பன் பாலத்தின் பணிகள் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவிலேயே முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று, பருவமழை உள்ளிட்ட காரணங்களால், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திட்டமிட்டபடி,  பணியை முடிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மும்பையில் முடிக்கப்பட்ட பாந்த்ரா-வோர்லி கடல் இணைப்புக்குப் பிறகு, இது இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட கடல்-பாலம் ஆகும். இந்த பாலத்தின் குறுக்கே உள்ள தொடருந்து பயணம் வியப்பூட்டும் காட்சிகளை அளிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா