முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தியாக சீலர்கள் மருதுபாண்டியர்களின். தூக்கிலிடப்பட்ட 220 வது நினைவு தினத்தில் அரசு மற்றும் ஆதீனம் சார்பில் மரியாதை

தமிழ்நாடு அரசு சார்பில் திருப்புத்தூர் தியாக சீலர்கள் மருதுபாண்டியர்களின்


நினைவு மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் நினைவு தினத்தை அரசு கடைபிடிக்கிறது.


இன்று  தூக்கிலிடப்பட்ட 220 வது நினைவு தினத்தில் அரசு சார்பில் சிவகங்கைமாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி மணிமண்டபத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபின் பெரிய மருது, சின்ன மருது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதற்கு முன்னதாக மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில் த.ராமசாமி சேர்வை மற்றும் வாரிசுதாரர்கள், பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.விழாவை முன்னிட்டு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் சுமார் 1200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சியில் தமிழகத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கரு.பெரியகருப்பன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.1799 ஆம் ஆண்டில் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கர் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமான் பிறந்த ஊரான திருகளம்பூர் எல்லை காவல் படை பிடித்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்களிடம் ஒப்படைக்க அவர் கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட பின்னர் அவர் தம்பி ஊமத்துரை குமாரபட்டி மக்கள் மூலம் அடைக்கலம் தேடி வந்து மருது சகோதரர்களிடம் தஞ்சமடைந்ததையடுத்து மருது சகோதரர்களுக்கும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிகளுக்குமான யுத்தம் மூண்டது.

1801 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி சிவகங்கை சமஸ்தானத்தின்மீதான தாக்குதலை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிப் படை துவங்கியதை எதிர்கொள்ள பிரிட்டன் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு  எதிரான கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உருவாக்கப்பட்டு 1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி நாவலந்தீவு என்ற ஜம்பு தீவு பிரகடனத்தை மருது சகோதரர்கள் வெளியிட்டனர். அதில் "இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும். ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய ஆற்காட்டு நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவை போலாகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள் உங்களிடையே ஒற்றுமையும் நட்புமில்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரையொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள்லிருக்கின்றனர். ஆயிரமாண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும். ஆதலால்


பாளையங்களிலுள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்... ஆதலால். மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்.

இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.

இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது.. இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகளாவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!..     

                                                                      இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள். எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான். இப்படிக்கு, மருது பாண்டியன், பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி."  இவ்வாறு நாவலந்தீவு பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த அறிக்கைக்குப் பின்னர் மருது சகோதரர்களுக்கு எதிரான யுத்தத்தை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி படை தீவிரமாக்கினர்.

ஆங்கிலேயர்களுடனான மருது சகோதரர்களின் யுத்தம் 150 நாட்கள் வரை நீடித்தது. மருது சகோதரர்களின் சிவகங்கை படைதளபதிகளில் ஒருவரான பாகனேரி வாளுக்கு வேலி அம்பலத்தின் வீரத்தை தங்களது வரலாற்று பக்கங்களில் ஆங்கிலேயர்களும் விவரித்திருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தென்பாண்டி சிங்கம் நாவலில் வீர வீரலாற்றைப்  பதிவு செய்திருக்கிறார். 

இறுதியாக .1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி திருப்புத்தூர் கோட்டையில் வாதாமரத்தின் அருகில் மருது சகோதரர்கள் மற்றும் 500 மேற்பட்ட மக்கள் தூக்கிலிடப்பட்டனர். மற்றும் ஒரு ஜாலியன் வாலாபாக் போல கொடுமை  மருது சகோதரர்களுடன் அவர்களது குடும்பத்தினர், உறவினர் என 500 க்கும் மேற்பட்டோர் தூக்கில் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர். மருது சகோதரர்களின் மைனர் மகன்  துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உறவினர்கள் நாடு கடத்தப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது.

1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  27 ஆம் தேதி மருது சகோதரர்களை தூக்லிட்ட ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி கொடுங்கோல் நிர்வாகம்  காளையார்கோவிலில் அவர்கள் இறுதி விருப்பத்தின் பேரில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி மூன்று நாட்கள் கழித்து உடல் திருப்பத்தூர் கூகுல்பார்க் சுவிடிஷ் மிஷன் மருத்துவமனையிலுள்ள இடத்திலும் தலை காளையார் கோவில் சன்னதிகளின் முன்புறமும்   அடக்கம் செய்யப்பட்டது



தியாக சீலர்கள் மருது சகோதரர்களுடன் 500 க்கும் மேற்பட்ட மக்கள் அவரது உறவினர்கள் திருப்பத்தூரில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கும் வகையில் #1801 திருப்பத்தூர் படுகொலை சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகிறது.

மருது சகோதரர்களின் வீரம், பாகனேரியார் வாளுக்கு வேலி அம்பலத்தாரின் வீரம் தொடர்பான பல்வேறு பதிவுகளும் இந்த டிரெண்டிங் பதிவுகளில் இடம்பெற்றுள்ளன


ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி கர்னல் ஸ்டிரே காளையார்கோவிலைக் கைப்பற்றிய நாழிகையில் . 1 டிசம்பர் 1801 அன்று மும்முனைத் தாக்குதலில் காளையார்கோவில் விழுந்தது. அதாவது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ராணுவ கர்னல் ஸ்டிரே கைப்பற்றியதே மருதிருவரைக் குறிவைத்துத் தான். மருதுபாண்டியர் இருவரும் சிக்கவில்லை. அடுத்தக்கட்டமாக மருது பாண்டியர்களுக்கு வேண்டியவர், உதவியாக வந்த உறவினர்கள் என தேடித்தேடிக் கொலை செய்யப்பட்டனர். காளையார் கோவிலிலிருந்து வெளியேறிய மருதிருவர்கள் தனது படை வீரர்களோடு சங்கரபதிக் கோட்டை மற்றும் சிறுவயல் காடுகளில் மறைந்து வாழ்ந்த காலத்தில். நிச்சயம் அவர்கள் இருவரையும் 

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி கர்னல் ஸ்டிரேவின் படையும் மருது பாண்டியர்களைத் தேடும் பொருட்டே செயல்பட்டனர். மருது பாண்டியர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஏராளமான பொற்காசுகளும், அரசாங்கத்தில் பல நல்ல பதவிகளும் பரிசாக வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்தனர். மருது பாண்டியரின் படை வீரர்களில் சிலர் பரிசுக்கும், அரசாங்கப்பதவிக்கும் ஆசைப்பட்டு மருது பாண்டியரை ஆங்கிலேயருக்குக் காட்டிக்கொடுக்க முற்பட்டது தான் சோகம். 

ஒக்கூர் அருகில் காளையார்மங்களம் கிராமத்துக் காடுகளில் மறைந்திருக்கின்றார்கள் மருதுபாண்டியர்கள் என்ற செய்தி, ஒரு ஒற்றன் மூலம் தெரியவருகிறது, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி பரங்கிப் பெரும்படைக்கும் எஞ்சி இருந்த மருது சகோதரர்கள் படைக்கும் வாழ்வா, சாவா என்ற உணர்வோடு கூடிய இறுதிப் போர் நடந்தது அது இந்திய வரலாற்றில் அன்னியருக்கு எதிரான சுதந்திரப் போர் பல நாட்கள் நல்ல தூக்கம், உணவுகள் இல்லாததால் காடு மேடு என்று ஓடியும் ஒளிந்தும் அலைந்து திரிந்ததால் மருது பாண்டியர்களின் உடல்கள் சோர்வில் களைத்துப் போயின. தொடையில் குண்டடிப்பட்ட நிலையில் பெரிய மருதுவை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி மேஜர் அகன்யூ கைது செய்தார். சின்னமருதுவை காட்டிக் கொடுத்ததும் அவரிடம் முன்பு வேலைக்காரனாக இருந்த கரடிக் கறுத்தான் என்பவன். நான்கு நாட்களுக்குப் பிறகு இருவரையும் 24.10.1801 அன்று  ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி மேஜர் அகன்யூ திருப்பத்தூர் கோட்டையில் தற்பொழுது பேருந்து நிலையத்திற்கு எதிரே வாதாமரத்தின் அருகிலுள்ள இடத்தில் முச்சந்தியில் தூக்கிலிட்டனர். வியாபாரிகளாக வந்த நாடு பிடித்த நரிகளாள ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த போது, ஆங்கிலேயர்களின் பெருமைக்குரிய வெற்றிகளில் ஒன்றாக இதைக் கருதினர் .

மொத்தமாக மருது சகோதரர்கள் வீரர்களையும் சேர்த்து 500 பேர் தூக்கிலிடப்பட்டார்கள்.  மூன்று நாட்கள் ஊரே போர்க்களமான வரலாறு. இறந்தவர்களின் உடலை தலை வேறு உடல் வேறாக பிரித்து உடலை திருப்பத்தூர் வீதிகளில் உலவ விட்டுள்ளார்கள். தலைகளை நகர வீதிகளில் வேல் கம்புகளில் செருகி பார்வைக்கு வைத்துள்ளார்கள். நடந்த நிகழ்வுகளால் திருப்பத்தூரில் மக்கள் வெளிவரவே பயமுற்று இருந்துள்ளனர்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி காப்டன் பிளாக்பர்ன் தலைமையில் சாக்கோட்டை, எழுவன் கோட்டை வழியாக கிழக்குப் பகுதியில் இராமநாதபுரத்திலிருந்து வருகை தரும் கூலிப்படையுடன் 30.9.1801 அன்று ஆறு வழிகளிலும் எழுபத்து இரண்டு மக்கள் தலைவர்களையும் நாடு கடத்த உத்திரவிட்டனர். ஈராயிரம் மைல் தொலைவில் உள்ள பெங்கோலோன் என்ற தீவில் கைதிகளாக வைத்திருக்க முடிவு செய்தனர். அதற்கு பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு என பெயரிட்டனர்.

ஆறு வார காலக் கப்பல் பயணத்தில் 11 டிசம்பர் 1802 ஆம் தேதி தூத்துக்குடி கொண்டு போய் சேர்க்கப்பட்டன. இவர்கள் அனைவரும் எண்பது நாட்கள் கையில் விலங்கிடப்பட்டவர்களாக கப்பலுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்ததால் கப்பலைவிட்டு வெளியே காலடி வைத்து இறங்கி வருவதே அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவர்களது உடல்நிலை மோசமாகவும், தெம்பு இல்லாதவர்களாகவும் காணப்பட்டனர். அதனால் வரும் வழியிலேயே  மூவர் இறந்தனர்.

மாவீரன் வேங்கை பெரிய உடையனத்தேவர் அதே கப்பலில் கொண்டு செல்லப்பட்டாலும், அங்கிருந்து சுமத்ரா தீவிலுள்ள பெங்கோலன் சிறைக்கு மாற்றப்பட்டு அங்குள்ள மால்பரோ கோட்டையில் தனிக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டார்.

தியாக சீலர்கள் மருது சகோதரர்களை தூக்கிலிட்டதற்கு ஆங்கிலேயர்கள் கூறும் முக்கிய காரணம், மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கர் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தது தான். அதை

மருது சகோதரர்கள் மரணித்த வரலாற்றுப் பக்கங்களில்  ஆங்கிலேயர்களே தனது டைரி குறிப்புகளில் தெரிவித்திருக்கின்றனர்.ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ் தமது நினைவுகளில் ஓரிடத்தில் மருது சகோதரர்களின் வீழ்ச்சியைப் பற்றி கூறுகையில் சில மாதங்களுக்கு முன் இதே வழியாகச் சென்று வெள்ளை மருதுவின் விருந்தாளியாக இருந்துவிட்டு அதே பிரதேசத்தில் அவரது எதிரியாக மீண்டும் என்பதை நான் சிறிதளவுகூட அறியாததேயாகும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஆங்கிலேயர்களை அனுசரித்து ஆட்சி செய்யாத காரணத்தினாலும் மருது பாண்டியர்கள் குறி வைக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார்.



அவரது தியாகத்தை நினைவு கூறும் நாளாக அமையும் அக்டோபர் மாதம் 24 மற்றும் 27 ஆம் தேதி அவர் குன்றக்குடி ஆலயத்தில் எழுப்பிய மண்டபத்தில் உள்ள மருதிருவர் சிலைகளுக்கு பூஜை செய்து மாலை அணிவித்து திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் சார்பில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல தேசிகர் பரமாச்சாரியார் சுவாமிகள் மரியாதை செய்து வழிபட்டார்.    நல்லு அம்பலம் என்ற வாளுக்கு வேலி அம்பலம்  மருதுபாண்டியரைக் காப்பாற்ற படை திரட்டி சென்ற கலைஞர் எழுத்தில்
தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம்::
மருதுபாண்டியர்களை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி கையில் பிடித்து
சிக்கிவிட்டார்கள் காளையார் கோவில்
வெள்ளைக்காரர் வசமாகிவிட்டது.
ஊமத்துரை மற்றும் விடுதலைப் படையை சேர்ந்தவர்கள் அனைவரும்
கைது செய்யப்பட்டனர் பெரியமருதுவையும்
சின்னமருதுவையும் திருப்பத்தூர்
கோட்டையிலே தூக்கு மாட்டி கொன்று தண்டனையை நிறைவேற்றப்
போகிறார்கள் என்று கதறிய மேகநாதன். வாளுக்கு வேலிஅம்பலம் புதிய தெம்புடன்
நம்பிக்கையுடன் கம்பீரமாக பேசினான்..
"முடியாது... மருதுபாண்டியரை தூக்கிலிட
அனுமதிக்க முடியாது கள்ளர் நாட்டுப் படைகள் மருது சகோதரர்களுக்கு கடைசி நேரத்தில் துணை நிற்காமல் நமது பகைதீர்க்க இங்கு வந்து நமக்குள்
சண்டையிட்டு கொண்டபடியால்
அல்லவா ஆங்கிலேயர்களின் கை ஓங்கிவிட்டது. இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை. பாகனேரி பட்டமங்கல நாட்டுப் படைகள் என் தலைமையில்  அணிவகுக்கட்டும்,  திருப்பத்தூர் கோட்டை நோக்கிப் புறப்படுவீர் இப்போதே. பெரியமருது சின்ன மருது இருவரையும்
விடுவிப்போம் ..நாம் போகும் வழியெல்லாம் உள்ள ஊர்களில் வீரர்களைத் திரட்டிச்செல்லுவோம்
ஆங்காங்கே போர்பயிற்சி பெற்ற வீரர்கள் மட்டுமல்ல, எக்குலதவராயினும் அனைவரும் தமிழ்க்குலம்-தன்மான மிக்ககுலம்  என்ற உணர்வோடு புறப்படட்டும் ! தீரமிக்க தமிழ்குடிகளின் முற்றுகை கண்டு திருப்பத்தூரில் பரங்கியர் பதறட்டும்! அக்னியுவின் ஆணவம் அடங்கட்டும் விடுவிப்போம் மருது பாண்டியரை வாரீர் வாரீர் ! நான் முன்னால் செல்கிறேன் எனக்கு பின்னால் ஒவ்வொரு அணியாக நமது படைகள் வரவேண்டும்" என்று ஆணையிட்டு குதிரை ஏறியிருந்த அந்த மாவீரன். வைரமுத்தன், ஆதப்பன், மேகனாதன் மற்றுமுள்ள படைத்தளபதிகள் ஐம்பது அடி இடைவெளி தூரத்தில்
படைகளுடன் அணிவகுத்து புறப்பட்டார்கள்.
எல்லோருடைய நினைவும் திருப்பத்தூர்
கோட்டை நோக்கியே பெரியமருது சின்னமருது தூக்குத் தண்டனை தடுக்க
படை வரிசை பாகனேரி எல்லையைக் கடந்து சொக்கநாதபுரம் வழி திருப்பத்தூரை நோக்கிப் போகின்ற சூழலில் கத்தபட்டு கிராமத்தில் வைரமுத்தனை கொல்லுவதற்கு உறங்காப்புலி சதிசெய்து படுகுழி வெட்டி வைத்திருக்கிறான்
அங்கே குழி இருப்பது யாருக்கும் தெரியாமல் இலைகள் பரப்பிவிடப்பட்டு அதன் மீது மண்பத்தைகளும் வைத்து மூடப்பட்டிருகிறது . படைகளுக்கு தலைமையேற்றுள்ள
வாளுக்கு வேலி அம்பலம் அந்தகுழியிருப்ப
து தெரியாமலேயே படைகளுக்கு முன்பு ஐம்பது அடி தொலைவில்
பயங்கர வேகத்தில் குதிரையில்
சென்று கொண்டிருகின்றான் . பின்னால் திரும்பி "வேகமாக வாருங்கள் விரைவில்
திருப்பத்தூர் சென்றடைந்தால் தான்
மருது சகோதரர்களை மரணப் படுகுழியிலிருந்து மீட்க முடியும்" என்று முழங்கியபோது... அந்த பயங்கர படுகுழியில்  குதிரையோடு விழுந்தான். அந்த தீடீர் பயங்கரத்தை கண்ட
படை நிலைகுலைந்து ஓடி வந்தது அதற்குள்
குழியை மண் மலைபோல மூடிக்கொண்டது.
அத்தனை படைவீரர்களும் ஓரிரு நொடியில் அந்த குழியை தோண்டி மண்ணை அகற்றி வாளுக்கு வேலியை வெளியே கொண்டு வந்தனர்.அந்த தென்பாண்டி சிங்கம் கத்தப்பட்டுப் படுகுழியில்
இருந்து சவமாக வெளியே வந்தான்!
இன்றைக்கும் கத்தபட்டில் சிலையாக
நின்று கொண்டிருக்கிறான்-ஏறத்தாழ 220 ஆண்டுகளுக்கு முன்பு, 1798 ஆம் ஆண்டு கயத்தாறு புதியமரத்தில் கட்டபொம்மு நாயக்கர் தூக்கிலிடப்பட்ட அந்த துயரம் தோய்ந்த நாட்களில் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு இந்த நாட்டின் மீது தொழு நோயாக பரவிக்கொண்டிருந்த கால கட்டத்தில் பெரிய மருது, சின்ன மருது என்ற பேராண்மை மிக்க வீரர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிப் படைகளை எதிர்த்து நின்ற நேரத்தில் காலனி ஆதிக்கத்தை தன்னுடைய காலடியால் மிதிப்பேன் என்றுரைத்த வீரர் குல நாயகன் தான் வாளுக்கு வேலி. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, உதடுகளுக்கு மேலே உரைவிட்டெழுந்த வாள் இரண்டை பதித்தது போல மீசை, கம்பீரத்தை காட்டும் விழிகள், அவற்றில் கருணையின் சாயலையும் அன்பின் பொழிவையும் கூட காண முடியும். நீண்டு உயர்ந்து வளைந்த மகுட தலைப்பாகை, நெடிய காதுகளில் தங்க வளையல்கள், விரிந்த மார்பகத்தில் விலை உயர்ந்த பதக்கமும் சலங்கையும், இரும்புத்தூனனைய கால்களிலும் எஃகு குண்டனைய முகங்களிலே காப்பு, கையிலே ஈட்டி, இத்தனை சிறப்புகளையும் சிலைவடித்து, கத்தப்பட்டு கிராமத்தில் இன்றைக்கும் காட்சி தருகிற தென்பாண்டி சிங்கம் துரோகத்தால் வீழ்ந்த வரலாறு நாம் கண்ட உண்மை தான் டாக்டர் கலைஞர் கதைக் களம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த