இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்கள் மற்றும் 2 படகுகளை உடன் விடுவிக்க இணை அமைச்சர் கோரிக்கை

இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளை உடனடியாக விடுவிக்க


நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை மத்திய தகவல் & ஒலிபரப்புத்துறை, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் வலியுறுத்தல்இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை மத்திய தகவல் & ஒலிபரப்புத்துறை, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குஇணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், இன்று எழுதியுள்ளக் கடிதத்தில், நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 66 மீனவக் கிராமங்களிலிருந்துதமக்கு கடிதம் வந்துள்ளது. அதில்  23 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளையும் பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவித்தல் தொடர்பாக, தமக்குக்  கோரிக்கைக் கடிதம் வந்துள்ளது. அந்தக் கோரிக்கையை ஏற்று  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். எனவே அந்த 23 மீனவர்களையும், அவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளையும் பாதுகாப்பாகவும் உடனடியாகவும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்தக் கடிதத்தில் அமைச்சர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா