இந்திய ராணுவத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் 29 நர்சிங் அதிகாரிகள் லெப்டினென்ட் அந்தஸ்தில் நியமனம்

பாதுகாப்பு அமைச்சகம்   இந்திய ராணுவத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் 29 நர்சிங் அதிகாரிகள் லெப்டினென்ட் அந்தஸ்தில் நியமனம்


டில்லி கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரி ராணுவ மருத்துவமனையில் (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை), ராணுவ மருத்துவமனை (R&R)-இல் பி எஸ் சி (H) நர்சிங் படிப்பில் பயிற்சி நிறைவு செய்த நான்காவது பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.ராணுவ மருத்துவமனை (R&R) கமான்டெண்ட், லெப்டினென்ட் ஜெனரல் ஜாய் சட்டர்ஜி விழாவிற்கு தலைமை வகித்தார். ராணுவ நர்சிங் பணி பிரிவின் கூடுதல் இயக்குனர் ஜெனரல், மேஜர் ஜெனரல் ஸ்மிதா தேவ்ராணி பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் 29 நர்சிங் பயிற்சி முடித்த அதிகாரிகள் ராணுவ நர்சிங் பணி பிரிவில் லெப்டினெண்ட் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பல்வேறு ராணுவ மருத்துவ மனைகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய லெட்டினெண்ட் ஜெனரல் ஜாய் சட்டர்ஜி, புதிதாக பணியில் அமர்த்தப்பட்டுள்ள நர்சிங் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதிய அதிகாரிகள் பணியின் நெறிமுறைகளை காக்க வேண்டும் என்றும் சேவை பாரம்பரியத்தை மேம்படுத்த‌ வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.நாட்டில் கொரோனா பெரும் தொற்றை எதிர்த்து முன் கள வீரர்களாக பணியாற்றி வருபவர்களை பாராட்டிய அவர் இளம் அதிகாரிகள் மருத்துவம் மற்றும் நர்சிங் துறைகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்றும் நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா