அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 43 இடங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை சோதனை

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை சோதனை நடத்தப்படுகிறது.


சென்னை வீடு உள்பட 43 இடங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை சோதனை நடத்தப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகிலுள்ள விஜயபாஸ்கர் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 43 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்ப்புத் துறை சோதனை செய்து வருகிறார்கள். விஜயபாஸ்கர் அதிமுக பொன் விழாவிற்காக சென்னை சென்றிருந்த நிலையில் இன்று அதிகாலை சோதனை நடத்தப்படுகிறது. டாக்டர் விஜயபாஸ்கர். வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்ததாக தற்போது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ரெய்டுக்கிடையில் உடனடியாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் அவரது மனைவி மீது இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. இலஞ்சப் பணத்தில் மூலம் அறக்கட்டளை துவங்கி முறைகேடாகப் பணம் வாங்கியதாகவும். முறைகேடாக அறக்கட்டளை மூலம் வரி ஏய்ப்பு செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 27 கோடி ரூபாயை முறைகேடாக சொத்து சேர்த்ததாக இந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் இந்த பணம் மூலம் நடத்தி வந்ததும். அதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டியதாகவும் புகார்கள்  முன் வைக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் இவர் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

அதிகமாக சொத்து சேர்த்ததாக இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்ட நிலையில் இந்த சோதனையும் நடந்தது. தற்போது தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் முடிவில் பல முக்கியமான தகவல்கள், முறைகேடுகள் வெளிவரலாம் எனக் கூறப்படுகிறது.முன்னால் அமைச்சர் C விஜயபாஸ்கர்
2006 ஆம் ஆண்டில் சொத்து மதிப்பாகக் காட்டியது -
மதர் தெரசா ஆரம்ப பள்ளி 
இரண்டு கோடி மதிப்பிலான ஆசையா சொத்து 
செங்கல் குவாரி. 
கல் பட்டறை. மட்டுமே
தற்போதைய சொத்துகள் 
மதர் தெரசா கல்வி நிறுவனம் மதிப்பு 20 கோடி 


பீகாரில் உள்ளதாக கூறப்படும் CVN மெடிக்கல்  காலேஜ் இதன்
மதிப்பு 104 கோடியாம்
அன்னவாசல் , இலுப்பூர் பகுதியில் உள்ள VIP ரியல் எஸ்டேட் பார்ட்னர் சீப். 
நவம்பட்டி 45 ஏக்கர் நிலம் 
புதுக்கோட்டை லயன் ஹவுசிங் 
பினாமி பெயரில் நடத்தப்படும் ஹோட்டல் மற்றும சாலை கான்ட்ராக்டுகள் 
அன்னவாசலில் புதிதாக கட்ட உள்ள 1 கோடி கூட பெறாத பஸ் நிலையத்திற்கு  பலகோடி கணக்குக் காட்டியது 
இன்னும் எவ்வளவோ..
இப்படி கடந்த 15 ஆண்டுகளில்  சேர்த்த சொத்து மதிப்பு தோரயமாக 800 கோடியிலிருந்து ஆயிரம் கோடி கோடியாக தேரும் இது (2016 ஆம் ஆண்டில்) இப்போது 2021 ஆம் ஆண்டு எத்தனை கோடியோ.
ஜாதி அரசியல் ஓட்டு வங்கியை வைத்துக் கொள்ளை அடிக்கும் ஆரசியல்வாதிகளில் மிகவும் முக்கியமான ஒருவர். அவரது விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும்  ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறை முறையாக சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாரின் வீடு பூட்டபட்டுள்ளது சோதனை துவங்கவில்லை தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. வீட்டின் சம்மந்தப்பட்ட நபர்கள் வருவார்கள் என லஞ்ச ஒழிப்புதுறை வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி இலுப்பூர் முன்னாள் சேர்மன் ராஜமன்னார் வீடு எடமலைப்பட்டிபுதூர் அன்பு நகரில் உள்ளது அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கோயமுத்தூர் மாமனார் வீட்டில் நகைக் குவிப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது.இப்படிப் பல.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டில், ரூ.23,85,700 பணமும், 4,870 கிராம் தங்க நகைகளும், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றுகள் & சொத்து பரிவர்த்தனை ஆவணங்கள் கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய ரூ.23,82,700 பணம், 19 ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா