அமைச்சர் இரகுபதி தலைமையில் ஆயிங்குடி ஊராட்சியும் மரம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 5000 மரங்கள் நடும் விழா

ஆயிங்குடி ஊராட்சி மன்றமும் மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய


மாபெரும் மரக்கன்று நடும் விழாவில் 5000 மரக்கன்றுகளை  இன்று காலை : 10.00 மணியளவில் சிறப்பு விருந்தினர்களாக சட்டம் மற்றும் நீதித்துறை  அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு முதல் மரம் நடுதல் செய்து வாழ்த்தினார். நிகழ்ச்சியில்

அரிமளம் முன்னால் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலா முத்து . மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை நிறுவனர் மரம் இராஜா மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார் ஊராட்சி மன்றத் தலைவர், பொன்.இராஜமாணிக்கம்  நன்றி கூறினார்.

ஆயிங்குடி ஊராட்சி சார்பாக  பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் விழாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மரங்கன்றுகளை நாம் அதிகமாக நட வேண்டும். என அமைச்சர் கருத்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் அரிமளம் ஒன்றியம் ஆயிங்குடியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் தமிழக சட்டம் மற்றும் நீதித்துறை  அமைச்சர் எஸ்.இரகுபதி பேசினார்.விழாவில் 


சிவகுண்டலம்.சிசு.ஆத்தி.ஆனைக்குன்றிமணி,இலுப்பை.மா.புங்கன்.புளி.சீதா.நெல்லி..கொய்யா.வேங்கை.மகோகனி.சொர்க்கம்...வாகை.உள்ளிட்ட அரியவகை பாரம்பரிய.மருத்துவ குணம் வாய்ந்த மரக்கன்றுகளை நடவு செய்தனர்.    இப்போது புதுக்கோட்டை பகுதியில் ஆங்காங்கே மழைநீர் பெய்து கொண்டிருப்பதால் இதுவே சரியான நேரம்...மரக்கன்றுகள் நடுவோம் வாங்க என்று அன்புடன் அழைக்கும் ஆயிங்குடி பஞ்சாயத்து தலைவர் அதற்கு உதவியாக கரம் கோர்த்து தனது புதுக்கோட்டை வடக்கு மூன்றாவது வீதியிலுள்ள நாற்றங்கால் பண்ணை மூலம் 5000 மரக்கன்றுகளைத் தருவித்து  மரம்  நடுதல் நிகழ்வு தமிழகத்தின் சட்டம் நீதி மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி முன்நின்று முதல் கன்றை நடவு செய்து துவக்கிவைத்து நடத்திய நிகழ்ச்சியில்


பருவ மழைக்காலத்தில் மழை பெய்யும் ஒரு நாளையோ அல்லது மேகமூட்டமான ஒரு நாளையோ தேர்ந்தெடுத்து முதல் மழைக்குப் பிறகு நடவு செய்வது நல்லது. என்ற நிலையில் 3 மீட்டரிலிருந்து 4 மீட்டர் இடைவெளி தூரத்தில் 1 அடி விட்டம் 2 அடி ஆழத்திற்கு 5000 குழி எடுத்து. எடுத்த மண் குழிக்குள் சரியா வண்ணம் சற்றுத் தள்ளிப் போட்டு அந்த மண் சில நாட்களுக்கு அப்படியே வெளியில் இருக்க. அதில் உள்ள கற்களையும், கூழாங்கற்களையும் நீக்கி அதோடு 3-ல் 1 பங்கு மக்கிய சாணிஉரம் சேர்ந்த 


நாற்றுப் பண்ணைகளில் இருந்து நாற்றைக் கொண்டுவந்து சேகரிப்பு செய்த.  நாற்றுக்களைக் கவனமாக கையாளவும் மற்றும் நூறுநாள் வேலை திட்ட பணிகள் மூலம் தண்ணீர் விட பஞ்சாயத்து தலைவர் ஆவன செய்த நிலையில்

ஈர மண்ணில் இருந்து வேர்கள் வெளியே தெரிந்தாலும், வேரைச் சுற்றியிருக்கும் மண் உதிர்ந்தாலும் கன்றுகள் காய்ந்துவிடும் வாய்ப்பு உண்டு.நாற்றுக்கள் வளர

ஆடு, மாடு மேய்ச்சலிலிருந்து காப்பதற்காக உள்ளூரிலேயே கிடைக்கும் பொருட்கள் மூலம் செடியைச் சுற்றிலும் வேலி உருவாக்கி செடிகளைக் காப் பாற்ற இரண்டு ஆண்டுகளுக்காவது தண்ணீர் விட வேண்டும். என்ற நல்ல ஆலோசனைகளை மரம் அறக்கட்டளை சார்பில் வழங்கினர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்