நாடு முழுவதும் 750 இடங்களில் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தின் மூலம் சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டங்கள்

இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் நாடு முழுவதும் 750 இடங்களில் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தின் மூலம் சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டங்கள்பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 750 இடங்களில் சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டங்கள் 10.10.2021 அன்று நடைபெற்றன. இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் முகமையான இந்திய மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கருவிகள் குழுவின் மூலம் இந்த விழாக்கள் நடைபெற்றன.

முழு நாள் நிகழ்ச்சிகளில் சுகாதார பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டதோடு, 75 வயதிற்கும் மேற்பட்ட மூத்தக் குடிமக்களுக்கு முதலுதவி பெட்டிகள் விலையின்றி வழங்கப்பட்டன. நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் சுகாதார பரிசோதனை முகாம்களில் கலந்துகொண்டனர்.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்ஷுக் மண்டாவியா, கர்நாடக முதலமைச்சர் திரு.பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா