இந்தியா-அமெரிக்கா பொருளாதார & நிதிக் கூட்டாண்மைக்கான 8-வது அமைச்சர்கள் கூட்டம்

நிதி அமைச்சகம்  இந்தியா-அமெரிக்கா பொருளாதார & நிதிக் கூட்டாண்மைக்கான 8-வது அமைச்சர்கள் கூட்டம் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்றது


இந்தியா-அமெரிக்கா பொருளாதார & நிதிக் கூட்டாண்மைக்கான அமைச்சர்கள் அளவிலான எட்டாவது கூட்டம் வாஷிங்டன் டி.சி.யில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க கருவூல செயலாளர் டாக்டர் ஜானெட் யெல்லென் இதற்குத் தலைமையேற்றனர்.


பரந்த பொருளாதாரக் கண்ணோட்டம், கொவிட்-19 பெருந்தொற்றில் இருந்து மீட்சி, நிதி ஒழுங்குமுறை, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பலதரப்பு ஈடுபாடு, பருவநிலை நிதி, பண மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலைத் தடுத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.


இருதரப்பு மற்றும் உலகளாவியப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், இணக்கமான உத்திகள் மற்றும் தீர்வுகளை நோக்கி பாடுபடுவதற்கும், ஒத்துழைப்பை தொடர்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் மற்றும் அமெரிக்கக் கருவூலச் செயலாளரின் கூட்டு அறிக்கையை ஏற்றுக்கொண்டு கூட்டம் நிறைவடைந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா