தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 95.89 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கொவிட்-19 அண்மைத் தகவல்

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 95.89 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.


கடந்த 24 மணி நேரத்தில் 14,313 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது; 224 நாட்களில் இதுவே மிகவும் குறைந்த அளவாகும்.

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ். தற்போது 0.63 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.


இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,14,900; கடந்த 212 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.04 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.


கடந்த 24 மணி நேரத்தில் 26,579 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,33,20,057 என அதிகரித்துள்ளது.

வாராந்திர பாதிப்பு விகிதம் (1.48 சதவீதம்) கடந்த 109 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.


தினசரி பாதிப்பு விகிதம் (1.21 சதவீதம்) கடந்த 43 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 58.50 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 97 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  இதுவரை, 97 (97,00,24,165) கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 8.22 கோடிக்கும் (8,22,69,545) மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 95.89 கோடியை கடந்துள்ளது. 


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  65,86,092 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 95.89 கோடியை (95,89,78,049) கடந்தது.  93,66,392 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 26,579 பேர் குணமடைந்துள்ளதால்,  இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,33,20,057 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.04 சதவீதமாக உள்ளது.  2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 107 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 14,313 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. 224 நாட்களில் இதுவே மிகவும் குறைந்த அளவாகும்.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,14,900; 212 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை. நாட்டில் மொத்தம் கொவிட் சிகச்சை பெறுபவர்களின் விகிதம் தற்போது 0.63 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,81,766 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 58.50 கோடி கொவிட் பரிசோதனைகள் (58,50,38,043) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி கடந்த 109 நாட்களாக 3 சதவீதத்திற்கும் கீழே நீடித்து, தற்போது 1.48 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி தற்போது விகிதம் 1.21 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 126 நாட்களாக 5 சதவீதத்திற்கு கீழேயும் 43 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 126 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

 HCWs

1st Dose

1,03,75,424

2nd Dose

90,36,583

FLWs

1st Dose

1,83,59,259

2nd Dose

1,53,98,857

Age Group 18-44 years

1st Dose

38,68,20,261

2nd Dose

10,40,73,546

Age Group 45-59 years

1st Dose

16,61,56,424

2nd Dose

8,38,76,362

Over 60 years

1st Dose

10,48,69,202

2nd Dose

6,00,12,131

Total

95,89,78,049 ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா