விமானப்படையின் மேற்கு பிராந்திய கமாண்டராக ஏர் மார்ஷல் அமித் தேவ் பொறுப்பேற்பு

பாதுகாப்பு அமைச்சகம் விமானப்படையின் மேற்கு பிராந்திய கமாண்டராக ஏர் மார்ஷல் அமித் தேவ் பொறுப்பேற்பு


விமானப்படையின் மேற்கு பிராந்திய ஏர் ஆபீசர் கமாண்டிங் இன் சீஃப் - ஆக ஏர் மார்ஷல் அமித் தேவ் ஏவிஎஸ்எம் விஎஸ்எம், ஏடிசி 01 அக்டோபர் 2021 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தேசிய ராணுவப் பயிற்சி கல்லூரியில் பயின்றவரான ஏர் மார்ஷல் அமித் தேவ் 1982 டிசம்பரில் விமானப்படையின் போர் விமானியாக பணியில் சேர்ந்து சுமார் 2500 மணி நேரம் போர் விமானங்களில் பறந்து பணிபுரிந்த அனுபவம் பெற்றவர் ஆவார்.


விமானப்படையில் சுமார் 39 ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார். இவர் மிக்-21 படைப்பிரிவு உட்பட விமானப்படையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி உள்ளார். இதற்கு முன்பு வரை இவர் கிழக்கு பிராந்திய விமானப்படையின் ஏர் ஆபீசர் கமாண்டிங் இன் சீஃப் – ஆக பணிபுரிந்து வந்தார்.

இவர் அதி விசிஸ்ட் சேவா பதக்கம், விசிஸ்ட் சேவா பதக்கங்களை பெற்றிருப்பதுடன் 01 ஆகஸ்ட் 2021 அன்று குடியரசுத் தலைவரின் கவுரவ ஏடிசி ஆக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்