சேட்டைப் பேச்சால் கைதான சாட்டைத் துரைமுருகன் சீமானுக்கும் சிக்கல்

சாட்டையின் சேட்டை சத்தம் காட்டாத சீமான்  யூ டியூபர் சாட்டை துரைமுருகன் நேற்று காலை கைது . திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இதை ட்வீட் செய்துள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சையாகப் பேசிய சாட்டை துரைமுருகன் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். திருச்சிராப்பள்ளியில் இளைஞரை தாக்கிய வழக்கில் கைதாகி  பிணையிலிருந்த சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது.

தனக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக கூறி பிணையில் வெளியே வந்த நபரான சாட்டை துரைமுருகன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், கலவரத்தைத் தூண்டும் விதமாக கன்னியாகுமரியில் பேசியது தொடர்பாக புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது.

கன்னியாகுமரியில் மலைகளை குடைவதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் சாட்டை துரைமுருகன் பேசிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு.  திமுகவினர் பலர்  காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். கன்னியாகுமரியில் முதல்வர் குறித்து அருவருக்கத்தக்க வகையில் சாட்டை துரைமுருகன் பேசியதாக குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டு இருக்கிறார்.


திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அளித்த புகார்  முக்கியமானதாக பார்க்கலாம்.  அந்தப் புகாரில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூ-டியூப் சேனல் நடத்தி வரும் துரைமுருகன் (@saattai online) என்பவர் குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவறாகப் பேசியும் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்  டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலையை கேலி செய்யும் வகையில் அவரது யூ-டியூப் சமுக வலைத்தள சேனலில் பதிவிறக்கம் செய்துள்ளார்.


மேலும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உருவத்தை கேலிசெய்யும் வகையில் சித்தரித்தும் தவறான தகவல்களையும் பரப்பி வருகிறார். எனவே துரைமுருகன் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவரது (@saattai online) யூ-டியூப், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேனல்களை உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன், என தருமபுரி காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

அதோடு தனது இன்னொரு ட்வீட்டில் Sattai YouTube சேனல் LMobi போன்ற வெளிநாட்டு ஸ்பான்சர்களின் உதவியுடன் வீடியோக்களைப் பதிவேற்றுகிறது, அது ஒரு வெளிநாட்டு ஊடகம். இந்தியாவில் வீடியோக்களைப் பதிவேற்றியது சட்டவிரோதமானதா, அது நமது ஊடகச் சட்டங்களுக்கு எதிரானதா என்று விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


விருப்பமுள்ளவர்கள் என்னைப் போல் காவல் துறை/ Online cybercrime மூலம் @Saattaidurai மீது புகார் அளிக்கலாம். புகாரில் பெண்கள்,குழந்தைகள் தலைவர்களை ஆபாசமாக பேசியதிற்காக அவரது YouTube channel முடக்க வேண்டும் என்று சேர்த்த புகார் அளிக்கவும். நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்திருந்தார் அந்த நிலையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். நேற்றே துரைமுருகனின் கைது குறித்து செந்தில்குமார் க்ளூ கொடுத்தார் என்பதும் காத்திருந்த அனைவருக்கும். Good news. நல்ல செய்தி, என்று தனது ட்வீட்டில் சாட்டை துரைமுருகன் கைது குறித்து

அவர் குறிப்பிட்டது போல கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் துரைமுருகனின் யூ டியூப் பக்கத்தை முடக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறியுள்ளார். ஏற்கனவே அவரின் சேனலை முடக்க வேண்டும் என்று தனது புகார் கடிதத்தில் செந்தில் குமார் குறிப்பிட்டு இருந்தார். தற்போது செய்துள்ள ட்வீட்டில், ஓகே. அடுத்த வேலை அந்த YouTube channel முடக்குவதுதான், என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சாட்டை துரைமுருகனின் யூ டியூப் கணக்கு விரைவில் முடக்கப்படும் என எதிர்பார்க்கலாம்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா