அஇஅதிமுக பொன்விழா பொதுச்செயலாளர் வி.கே.சசிக்கலா நடராஜன் கல்வெட்டு பேசுபொருளாகிறது

சென்னை தியாகராய நகரில்  அஇஅதிமுக நிறுவனர் மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன். நினைவில்லத்திற்கு வி.கே.சசிகலா நடராஜன் சென்று எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, அ.இ.அ.தி.மு.க., கொடி ஏற்றி வைத்தார். 'பொதுச்செயலர் வி.கே. சசிகலா' என பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்தது வைத்தார் ஆட்சியை இழந்த அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி அடைந்து நேரத்தில்,


அ.இ.அ.தி.மு.க.,வின் 50 ஆம் ஆண்டு பொன் விழாக் கொண்டாடம். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை அ.இ.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகளுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என உள்ள 0.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் என உள்ள கே.பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருவரும் அ.இ.அ.தி.மு.க., கொடியை ஏற்றி வைத்து, கூடிய நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 'மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்' என்றபொன் விழா சிறப்பு மலரும், அ.இ.அ.தி.மு.க., - ஐ.டி., அணி சார்பில் தயாரிக்கப்பட்ட பொன் விழா பாடலும் வெளியிடப்பட்ட. பின், சென்னை மெரினா கடற்கரையிலுள்ள முன்னால் முதல்வர்கள் அறிஞர் அண்ணாத்துரை, டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன்., டாக்டர் செல்வி.ஜெ.ஜெயலலிதா நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செய்தனர்.இதேபோல் வி.கே.சசிக்கலா நடராஜன் தியாகராயநகர்


எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், அ.தி.மு.க., கொடியை ஏற்றி, கல்வெட்டை திறந்து வைத்த பிறகு இராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., வீட்டிற்குச் சென்று எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது, பேசியதாவது:

நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள் தான், நம் எதிரிகளுக்கு இடம் கொடுத்து விட்டன. அ.தி.மு.க., விற்காக, தொண்டர்களுக்காக, மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மக்களின் பேராதரவோடு அ.தி.மு.க., ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும்; அ.தி.மு.க., வென்றாக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
அவர் அளித்த பேட்டி:கல்வெட்டில் அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா என குறிப்பிடப்பட்டு உள்ளது நீதிமன்றத்தின் கண்டனத்திற்குரியது. எங்களுக்கு தான் இரட்டை இலை; நாங்கள் தான் கட்சி என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது. எல்லாரும் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், ஒரு கல்வெட்டில் பெயர் போட்டால் பொதுச் செயலராக முடியுமா; செஞ்சி கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்காக முடியுமா; மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆக முடியுமா; சசிகலா மீது சட்ட ரீதியாக கட்சி நடவடிக்கை எடுக்கும்.


சசிகலா எந்த ஒரு தியாகமும் செய்யவில்லை. பின்னர் எப்படி அவர் தியாகத் தலைவியாக முடியும்? தற்போது தியாகத் தலைவி என்பது போய் புரட்சி தாயாம். சசிகலா தன் குடும்பத்தை வாழ வைக்கும் புரட்சியை தான் செய்தார். இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.


அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை:கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என நினைத்திருந்த நேரத்தில், எதிரணியினர் அமைத்த மெகா கூட்டணி, அள்ளி வீசிய சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகளால், ஆட்சி நம்மை விட்டு கைநழுவி போய்விட்டது.


அ.தி.மு.க., தோன்றி, 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50-வது பொன் விழா ஆண்டு துவங்கும் பொன்னாளில், ஜெயலலிதா வகுத்து கொடுத்த பாதையில் பயணித்து, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி மலர, ஓயாது உழைப்போம் என நாம் அனைவரும் சூளுரைப்போமெனக் கூறியுள்ளார்.மொத்தத்தில் அஇஅதிமுக வில்  பொதுச்செயலாளர், மற்றும் ஒருங்கிணைப்பார், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அது வெளிவரும் போது தான் இந்த பதவி பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.அதுவரை அரசியல் யாரும் வாய்க்கு வந்ததை பேசலாம். எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிமுறைகள் படி ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரு பதவியோ இணை ஒருங்கிணைப்பாளர் என்பதோ இல்லை இவர்கள் நிலை தீர்ப்பு வந்த பின்னர் தான் முடிவாகும்.
மேலும் கட்சி பிளவு பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் சின்னங்கள் குறித்த முடிவுகள் மட்டுமே எடுக்க இயலும் உள் கட்சி கட்டமைப்பு விவகாரத்தில் தலையிட மாட்டாது. 

அவ்வாறு இருக்க தொண்டர் களைத் தக்க வைக்க இந்த போட்டி விழாக்கள் நடைபெறுகிற நிலையில் அரசியல் பொதுப் பார்வை ஒன்று உண்டு. தற்போதுள்ள தேர்வு பொதுச்செயலாளர் வி.கே.சசிக்கலா நடராஜன் ஒரு பருந்து போல அரசியல் விழிப்புணர்வு பெற்றவர் மற்றவர்கள் அவரோடு போட்டியில் வெல்ல ஆட்சி அதிகாரம் கொண்ட நபர்கள் ஆதரவு தேவை என்ற நிலையே உள்ளது.
காரணம் அவர்கள் செய்த வரலாற்று ஊழல்கள் மற்றும் கொள்ளைகள். ஆதலால் .*இந்த இராஜாளிப் பறவை மீண்டும் பறக்கும்* கழுகிடம் இருந்து கற்க வேண்டிய பாடம் அரசியல் சாணக்கியர் முனைவர் ம.நடராஜன் வழியில் வி.கே.சசிக்கலா நடராஜன் ஒரு ஒப்பீடு.!


பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம். 70 ஆண்டுக் காலம் வாழ வேண்டுமென்றால், அது 40 வயதில் தன்னையே உருமாற்றம் செய்ய வேண்டும்.கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும்.


இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள்.கழுகு என்ன செய்யும் தெரியுமா? இந்தக் காலத்தில், உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்திருக்கும்.


புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும்.இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.


வாழ்க்கையில் இதுதான் கடைசி என்று நினைப்போம். ஆனால், அந்த வாழ்க்கையைப் புதுப்பிக்க வாய்ப்புக் கிடைக்காமல் போகாது. ஆனால், அந்த வாய்ப்பு வலியோடு வரலாம்.அதைத் தாங்குவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அதை ஏற்றுக்கொண்டு அதைத் தாண்டி வந்தால் யாருக்கும் மறுபிறவி கிடைக்கலாம். அது அந்த இயக்கம் ஆகட்டும் அல்லது அவராகட்டும் . அதுவே சரித்திர மாற்றம் பீனிக்ஸ் தான் இந்த இராஜாளிப் பறவை முதல் குற்றவாளியாக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதாஉயிருடன்  இருந்திருந்தால் அவரும் சிறை தண்டனை பெற்றதாக சென்று வந்திருப்பார் என்பதே நிஜம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா