லக்னோ கக்கோரியில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு விலையில்லா சமையல் எரிவாயு இணைப்புகளை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விநியோகித்தா

பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கக்கோரி என்ற இடத்தில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு விலையில்லா சமையல் எரிவாயு இணைப்புகளை திரு.ஹர்தீப் சிங் பூரி விநியோகித்தா

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கக்கோரி என்ற இடத்தில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு விலையில்லா சமையல் எரிவாயு இணைப்புகளை திரு.ஹர்தீப் சிங் பூரி இன்று விநியோகித்தார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு பூரி கடந்த ஏழு ஆண்டுகளில் சமையல் எரிவாயு இணைப்புகள் இரண்டு மடங்குக்கும் அதிகமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு 14 கோடியாக இருந்த இணைப்புகள் தற்போது சுமார் 30 கோடியாக உள்ளன என்று கூறினார். 2016ம் ஆண்டு மோடி அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எட்டு மாதங்களிலேயே 8 கோடி இணைப்புகள் என்ற இலக்கு எட்டப்பட்டது என்று அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் அதிகம் தேவைப்படும் குடும்பங்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான இணைப்புகள் வழங்கும்பணி நடைபெற்றுவருகிறது என்று அமைச்சர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு.கவ்ஷல் கிஷோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்